காலி இடத்தில் கொசு உற்பத்திவிஷ ஜந்துக்களாலும் மக்கள் பீதி| Dinamalar

காலி இடத்தில் கொசு உற்பத்திவிஷ ஜந்துக்களாலும் மக்கள் பீதி

Added : செப் 14, 2022 | |
கோவிலம்பாக்கம்,:கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கொளத்துார் பகுதியில், காலி இடத்தில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் குப்பையால் கொசு உற்பத்தி தாராளமாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை, மேடவாக்கம் அடுத்துள்ள கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது சுண்ணாம்பு கொளத்துார் பகுதி. இங்கு இன்ஜினியர்ஸ் அவென்யூ முதல்
காலி இடத்தில் கொசு உற்பத்திவிஷ ஜந்துக்களாலும் மக்கள் பீதி

கோவிலம்பாக்கம்,:கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கொளத்துார் பகுதியில், காலி இடத்தில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் குப்பையால் கொசு உற்பத்தி தாராளமாகியுள்ளது.


இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை, மேடவாக்கம் அடுத்துள்ள கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது சுண்ணாம்பு கொளத்துார் பகுதி. இங்கு இன்ஜினியர்ஸ் அவென்யூ முதல் பிரதான சாலையில் 600 வீடுகள் உள்ளன.இத்தெருவில், மூன்று கிரவுண்ட் காலி மனை உள்ளது. இந்த காலி மனையில் மழை நீர் தேங்குவதாலும், குப்பை மிகுதியாக சேர்ந்திருப்பதாலும் கொசு உற்பத்திக்கூடமாக இந்த இடம் மாறியுள்ளது.



இதனால், இப்பகுதி மக்கள் பகல் நேரத்திலும் கொசுத்தொல்லைக்கு ஆளாகி, பலவித நோய்களுக்கும் ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது.மேலும், இந்த காலி இடத்தில் தண்ணீர், குப்பை தேங்கியுள்ளதால் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால், சாலையில் பயணிப்போருக்கும், வீடுகளில் வசிப்போருக்கும் ஆபத்து நிகழும் சாத்தியம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, இந்த காலி இடத்தால் எழக்கூடிய ஆபத்துகளிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X