புதர் மண்டிய மண்புழு உரக் கொட்டகை

Added : செப் 14, 2022 | |
Advertisement
செஞ்சி:செஞ்சி ஊராட்சியில், பயன்பாட்டிற்கு வராமலேயே, மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை சேதமடைந்து வீணாகி உள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, செஞ்சி ஊராட்சி. இங்கிருந்து பேரம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் மக்கும் குப்பையிலிருந்து, மண்புழு உரம் தயாரிக்க, 2017- - 18ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், ௧ லட்சம் ரூபாய் மதிப்பில், மண்புழு உரக்
புதர் மண்டிய மண்புழு உரக் கொட்டகை

செஞ்சி:செஞ்சி ஊராட்சியில், பயன்பாட்டிற்கு வராமலேயே, மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை சேதமடைந்து வீணாகி உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, செஞ்சி ஊராட்சி. இங்கிருந்து பேரம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் மக்கும் குப்பையிலிருந்து, மண்புழு உரம் தயாரிக்க, 2017- - 18ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், ௧ லட்சம் ரூபாய் மதிப்பில், மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்த உரக் கொட்டகையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில், வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையான காய்கறி, பழம் போன்றவை கொட்டப்பட்டு மண்புழு தயாரித்து விற்பனை செய்யும் நோக்கத்தில் துவங்கப்பட்டது.ஆனால், இந்த மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டு நான்காண்டுகளாகியும், பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வீணாகி புதர் மண்டி இருக்கிறது.
மேலும், மண்புழு உரக்கொட்டகைக்கு ஓலைகளால் அமைக்கப்பட்ட கூரை மாயமாகி உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த மண்புழு உரக் கொட்டகையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X