நெற்களமாக மாறிய குடியிருப்பு பகுதி சாலை

Added : செப் 14, 2022 | |
Advertisement
சிற்றம்பாக்கம்:சிற்றம்பாக்கம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை நெற்களமாக மாறியதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது சிற்றம்பாக்கம் ஊராட்சி. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இந்த ஊராட்சியில், நெற்களம் இல்லாததால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் நெல் மணிகளை
நெற்களமாக மாறிய குடியிருப்பு பகுதி சாலை

சிற்றம்பாக்கம்:சிற்றம்பாக்கம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை நெற்களமாக மாறியதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது சிற்றம்பாக்கம் ஊராட்சி. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இந்த ஊராட்சியில், நெற்களம் இல்லாததால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் நெல் மணிகளை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் உலர வைத்து தார்ப்பாய் போட்டு மூடிவிடுகின்றனர்.
இதனால் அப்பகுதி வழியே வாகனங்களில் செல்பவர்கள், மற்றொரு சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நெற்களம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X