மக்கள் தொடர்பு முகாமில் 223 பேருக்கு நலத்திட்ட உதவி

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : மடத்துக்குளம் அருகே நடந்த, மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாமில், 223 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மடத்துக்குளம் அருகேயுள்ள சங்கராமநல்லுாரில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.இதில், முதியோர் உதவித்தொகை, 76 பேருக்கும், ரேஷன் கார்டு, 66, பட்டா மாறுதல், 22 பேருக்கும், விதவை உதவித்தொகை, நத்தம்பட்டா
மக்கள் தொடர்பு முகாமில் 223 பேருக்கு நலத்திட்ட உதவி

உடுமலை : மடத்துக்குளம் அருகே நடந்த, மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாமில், 223 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் அருகேயுள்ள சங்கராமநல்லுாரில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.இதில், முதியோர் உதவித்தொகை, 76 பேருக்கும், ரேஷன் கார்டு, 66, பட்டா மாறுதல், 22 பேருக்கும், விதவை உதவித்தொகை, நத்தம்பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.மேலும், வேளாண் துறை, தோட்டக்கலைத்துறையின், பல்வேறு திட்டங்களின் கீழ், 26 பேருக்கும், மானிய திட்ட உபகரணங்கள், விதைகள், நாற்றுக்கள் வழங்கப்பட்டது.இம்முகாமில், மொத்தம், 223 பேருக்கு, 19.47 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X