சர்வதேச ஓபன் 'பிடே ரேட்டிங்'சதுரங்கத்தில் பங்கேற்க அழைப்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
சென்னை,:வடபழனியில் நடைபெற உள்ள, சர்வதேச ஓபன் 'பிடே ரேட்டிங்' சதுரங்கப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி, மாஸ்டர் மைன்ட் செஸ் அகாடமி மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, முதலாவது சர்வதேச ஓபன் 'பிடே ரேட்டிங் ராபிட்' சதுரங்கப் போட்டியை, வரும் 25ம் தேதி நடத்துகின்றன. வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வளாகத்தில் நடைபெறும்

சென்னை,:வடபழனியில் நடைபெற உள்ள, சர்வதேச ஓபன் 'பிடே ரேட்டிங்' சதுரங்கப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி, மாஸ்டர் மைன்ட் செஸ் அகாடமி மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, முதலாவது சர்வதேச ஓபன் 'பிடே ரேட்டிங் ராபிட்' சதுரங்கப் போட்டியை, வரும் 25ம் தேதி நடத்துகின்றன.

வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில், ஓபன் முறையில் 'ஸ்விஸ்' அடிப்படையில், மொத்தம் எட்டு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடைபெறுகின்றன.போட்டிகள் காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை 5:00 மணிக்கு நிறைவடையும். போட்டியின் மொத்த பரிசுத் தொகை, 2 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், போட்டியின் முடிவில் எட்டு, 10, 12 மற்றும் 18 வயது என, நான்கு பிரிவுகளாக பிரித்து, சிறுவர்களில் தலா எட்டு கோப்பைகளும், சிறுமியரில் தலா ஐந்து கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. தவிர, முதல் ௧௦ இடங்கள் பிடிப்பவர்களுக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட உளளன.பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 86102 92372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X