ஓசோன் தின விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : ஆனைமலை, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில் நேற்று,ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார்.அறிவியல் ஆசிரியர்கள் சபரீஸ்வரன், கிருபாநந்தினி மற்றும் பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கம் முடிந்ததும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
ஓசோன் தின விழிப்புணர்வு பள்ளியில் கருத்தரங்கம்

பொள்ளாச்சி : ஆனைமலை, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில் நேற்று,ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார்.அறிவியல் ஆசிரியர்கள் சபரீஸ்வரன், கிருபாநந்தினி மற்றும் பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கம் முடிந்ததும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஆசிரியர்கள் பேசியதாவது:சர்வதேச அளவில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது.

சூரியனில் இருந்து வரும் கதிர்களை ஓசோன் படலம் தடுப்பதால், உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. நமது செயல்களால் நாளுக்குநாள் ஓசோன் படலம் பலவீனமடைந்து வருவதால், உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கும்போது வெளியாகும் வாயு, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால், ஓசோன்படலம் தேய்கிறது.

வாகனங்கள், குளிர்சாதன பெட்டிகள் பயன்பாட்டை குறைத்து, அனைத்து உயிர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டும்.இந்த பாதிப்பை தவிர்க்க, அதிக அளவில் மரங்கள் நடவு செய்து பசுமையான சூழலை உருவாக்க வேண்டும். மரம் வளர்ப்பு மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும். இதுபற்றி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X