சிறுமியிடம் பாலியல் சீண்டல்; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை| Dinamalar

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 14, 2022 | |
உடுமலை : சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.காங்கயம் பகுதியில் வசிக்கும் தம்பதியின் எட்டு வயது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 39, தன் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ்

உடுமலை : சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



காங்கயம் பகுதியில் வசிக்கும் தம்பதியின் எட்டு வயது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 39, தன் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் லோகநாதனை கைது செய்தனர்.வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி நாகராஜன், எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட லோகநாதனுக்கு, பத்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X