ரோட்டை கடக்க குழந்தைகளுக்கு சிரமம்; டிவைடர் அமைப்பது அவசியம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலை அருகே பள்ளிக்குழந்தைகள், மாநில நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில், குறியீடுகள் மற்றும் டிவைடர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே கொங்கல்நகரத்தில், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை அருகில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர்.கிராம பஸ் ஸ்டாப் அருகே,

உடுமலை : உடுமலை அருகே பள்ளிக்குழந்தைகள், மாநில நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில், குறியீடுகள் மற்றும் டிவைடர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை அருகே கொங்கல்நகரத்தில், பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை அருகில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர்.கிராம பஸ் ஸ்டாப் அருகே, பள்ளி நுழைவாயில் அமைந்துள்ளது. இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில், மாநில நெடுஞ்சாலையை கடக்க, பள்ளிக்குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.அங்கு, போதிய குறியீடுகள் மற்றும் டிவைடர் இல்லாததால், குழந்தைகள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.

இதே போல், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, அம்மாபட்டி உட்பட கிராம குழந்தைகள் படித்து வருகின்றனர்.கிராமத்திலிருந்து நடந்து வரும் குழந்தைகள், மாநில நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். அப்பகுதியில், அதிவேகமாகச்செல்லும் வாகனங்களால், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, குடிமங்கலம் போலீசார் சார்பில், டிவைடர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை வேறு இடத்துக்கு, குடிமங்கலம் போலீசார் எடுத்துச்சென்று விடுகின்றனர்.

மேலும், அங்கு பள்ளிக்குழந்தைகள் ரோட்டை கடக்கும் பகுதி என்பதற்கான குறியீடுகளும் நெடுஞ்சாலைத்துறையால், அமைக்கப்படவில்லை.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், குழந்தைகள் ரோட்டை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. இந்த இரு இடங்களிலும், பள்ளிக்குழந்தைகள் ரோட்டை பாதுகாப்பாக கடக்க, குடிமங்கலம் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X