திருத்தணி கோவிலில் அபிஷேகம், சேவை கட்டணம்...அதிகரிப்பு!: பக்தர்களிடம் கருத்து கேட்புக்கு பின் உயர்த்த முடிவு

Added : செப் 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், அபிஷேகம் மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.அதற்காக பக்தர்களிடம் கருத்து கேட்புக்கு, இம்மாதம், 25ம் தேதிக்குள் கோவில் தலைமை அலுவலகத்திற்கு இணையதளம் / நேரிலோ அல்லது தபால் வாயிலாக அனுப்பி வைக்கலாம் என அறிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு
 திருத்தணி கோவிலில் அபிஷேகம், சேவை கட்டணம்...அதிகரிப்பு!: பக்தர்களிடம் கருத்து கேட்புக்கு பின் உயர்த்த முடிவு

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், அபிஷேகம் மற்றும் சேவை கட்டணங்களை அதிகரிக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.அதற்காக பக்தர்களிடம் கருத்து கேட்புக்கு, இம்மாதம், 25ம் தேதிக்குள் கோவில் தலைமை அலுவலகத்திற்கு இணையதளம் / நேரிலோ அல்லது தபால் வாயிலாக அனுப்பி வைக்கலாம் என அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக் கானவர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். ல பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்ககிரீடம், வெள்ளிகிரீடம் அணிவித்தல், சந்தன காப்பு, தங்கதேர் இழுத்தல், கேடய உற்சவம் மற்றும் வெள்ளிமயில் போன்ற வாகன சேவைகள் பக்தர்கள் அதற்கான கட்டணம் செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
மேற்கண்ட சேவைகள், ஒன்பது ஆண்டுகளாக கட்டண தொகை உயர்த்தப்படாமல் உள்ளது. மேலும் பஞ்சாமிர்த அபிஷேகம் மட்டும், ஐந்து ஆண்டுகளுக்கு முன், 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டது.மேற்கண்ட சேவைகள் பக்தர்கள் நிறைவேற்றிய உடன் கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சேவைகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கோவில் நிர்வாகம், சேவை கட்டணம் மற்றும் அபிஷேக கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளது.இதற்கான கோவில் நிர்வாகம் புதிய கட்டண தொகை உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, சந்தன காப்புக்கு தற்போது 4,000 ரூபாய் பெறப்பட்டு வருகிறது. ஆனால், புதிய கட்டணமாக, 10 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.அதேபோல், வெள்ளி மயில் வாகன சேவைக்கு தற்போது, 3,500 ரூபாய் பெறப்படுகிறது. புதிய கட்டணமாக, 8,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், புதிய கட்டண தொகை உயர்வுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தீர்மானித்து, கட்டண உயர்வுக்கு ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகள் வழங்குவதற்கு, இம்மாதம், 25ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் மனுவாக திருத்தணியில் உள்ள முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில் நேரிடையாக கொடுக்கலாம்.மேலும் தங்களது ஆலோசனைகள், ஆட்சேபணை கடிதங்கள் தபால் மூலம் அல்லது இணையதள முகவரியில் www.tiruttanigaimurugan@gmail.com அனுப்பலாம்.
இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், முருகன் கோவிலில் நடைபெறும் சேவைகள் மற்றும் அபிஷேகம் போன்றவைக்கு மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தவிர்க்க முடியாத நிலையில் தான் கட்டணம் உயர்த்த உள்ளோம்.இதற்காக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கடிதங்கள் இம்மாதம், 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு, முருகன் கோவில் மற்றும் அதன் துணை கோவில்களில் உள்ள அறிவிப்பு பலகையில் துண்டு பிரசுரம் மூலம் விளம்பரம் செய்துள்ளோம்.
பின் வரப்பட்ட கடிதங்களில் ஆட்சேபணை மற்றும் ஆலோசனைகள் குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, ஒரு மாதத்துக்கு பின், கட்டண உயர்வு நிர்ணயித்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சேவைகள் டிக்கெட் 'ஆன்லைன்' வாயிலாக வழங்கப்படுமா?


முருகன் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகள் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேக டிக்கெட்டுகள் பெறுவதற்கு, 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் வரை 'ஆன்லைன்' வாயிலாக வினியோகம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக 'ஆன்லைன்' வாயிலாக டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, வழக்கம் போல் அனைத்து சேவைகளும், அபிஷேகமும் நடத்தப்படுகிறது. ஆனால், டிக்கெட் பெறுவதற்கு மலைக்கோவில் மேல் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து தான் பெற்று செல்ல வேண்டியுள்ளது. இதனால் வெளியூர் பக்தர்கள் தேவையில்லாமல் இரு முறை திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழைய மாதிரி சேவை மற்றும் அபிஷேக டிக்கெட்டுகள் 'ஆன்லைன்' வாயிலாக வினியோகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202222:38:22 IST Report Abuse
Balaji Radhakrishnan இரண்டு மடங்கு உயர்வு என்பது ரொம்ப அதிகம். இதற்க்கு தீர்வு. இந்த ஆட்சியை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
Rate this:
Cancel
15-செப்-202206:14:12 IST Report Abuse
அப்புசாமி விலைவாசி உயர்வு முருகனுக்கே கட்டுப்படியாகலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X