ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை தடுத்து நிறுத்திய மார்ஷல்கள் 

Added : செப் 14, 2022 | |
Advertisement
பெங்களூரு-ஹிந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பு பட்டி அணிந்து சட்டசபைக்கு வந்த, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை மார்ஷல்கள் தடுத்து நிறுத்தினர்.கர்நாடகாவில், ஹிந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு விதான் சவுதா காந்தி சிலை அருகில், நேற்று போராட்டம்நடத்தினர். அதன்பின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, இப்ராகிம், சரவணா உட்பட, ம.ஜ.த., -



பெங்களூரு-ஹிந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பு பட்டி அணிந்து சட்டசபைக்கு வந்த, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை மார்ஷல்கள் தடுத்து நிறுத்தினர்.கர்நாடகாவில், ஹிந்தி தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு விதான் சவுதா காந்தி சிலை அருகில், நேற்று போராட்டம்நடத்தினர். அதன்பின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, இப்ராகிம், சரவணா உட்பட, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள், கறுப்பு பட்டி அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முற்பட்டனர்.நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய மார்ஷல்கள், 'கறுப்பு பட்டி அணிந்து உள்ளே செல்ல அனுமதியில்லை' என்றனர். 'நாங்கள் விதிமுறைகளை மீறமாட்டோம்' என, குமாரசாமி கூறியும், மார்ஷல்கள் ஏற்கவில்லை. அதன்பின் கறுப்பு பட்டியை அகற்றிவிட்டு, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்குள் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X