அங்கன்வாடி ஊழியர்கள் நீக்கம்?அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பதில்!

Added : செப் 14, 2022 | |
Advertisement
பெங்களூரு-“அங்கன்வாடி ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பணியிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள்,” என மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பசப்பா உறுதியளித்தார்.கர்நாடகா சட்ட மேலவையில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜுவின் கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பசப்பா கூறியதாவது:கர்நாடகாவில் இந்த ஆண்டு 20 ஆயிரம் அங்கன்வாடி



பெங்களூரு-“அங்கன்வாடி ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பணியிலிருந்து நீக்கப்பட மாட்டார்கள்,” என மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பசப்பா உறுதியளித்தார்.கர்நாடகா சட்ட மேலவையில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜுவின் கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் ஆச்சார் ஹாலப்பா பசப்பா கூறியதாவது:கர்நாடகாவில் இந்த ஆண்டு 20 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் புதிய தேசிய கல்வி கொள்கை, பள்ளிக்கு முந்தைய பாடத்திட்டம் அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அங்கன்வாடிகளில் பாடத்திட்டத்தை உருவாக்க ஆறு கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கமிட்டி அளிக்கும் சிபாரிசின் அடிப்படையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும். அதன்பிறகு பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.தேசிய கல்வி கொள்கையின் வழிகாட்டுதல்படி அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை டிப்ளமோ பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு, அவர்கள் மூலம் பாடம் நடத்தப்படும். எக்காரணத்தை கொண்டும் அவர்களை வேலையில் இருந்து நீக்க மாட்டோம்.கர்நாடகாவில் புதிதாக 4,266 அங்கன்வாடி மையங்களை துவக்க முதல்வர் பசவராஜ் பொம்மை அனுமதி அளித்துள்ளார். இனி அங்கன்வாடிகளுக்கு புதிய கல்வி திட்டத்தின் அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவர். கர்நாடகாவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளில் பி.யு.சி., மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே பி.யு.சி.,க்கும் குறைவான கல்வி தகுதி கொண்டவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும். தற்போது பணியாற்றுவோரில் பெரும்பாலும் 48 வயதுக்கு மேற்பட்டோர் தான் உள்ளனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X