இட ஒதுக்கீடு விவாதிக்க காங்., நெருக்கடி; பொறுமையிழந்த சபாநாயகர் அட்வைஸ்| Dinamalar

இட ஒதுக்கீடு விவாதிக்க காங்., நெருக்கடி; பொறுமையிழந்த சபாநாயகர் 'அட்வைஸ்'

Added : செப் 14, 2022 | |
பெங்களூரு-எஸ்.டி., சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி, உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்ததால், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பொறுமையிழந்து உறுப்பினர்களை கண்டித்தார்.கர்நாடக சட்டசபையில், நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், கம்ப்ளி தொகுதி காங்., உறுப்பினர் கணேஷ், 'எஸ்.டி., சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு, இரவு



பெங்களூரு-எஸ்.டி., சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்கும்படி, உறுப்பினர்கள் நெருக்கடி கொடுத்ததால், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, பொறுமையிழந்து உறுப்பினர்களை கண்டித்தார்.கர்நாடக சட்டசபையில், நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், கம்ப்ளி தொகுதி காங்., உறுப்பினர் கணேஷ், 'எஸ்.டி., சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு, இரவு பகலாக போராட்டம் நடத்துகின்றனர். இது முக்கியமான விஷயம் என்பதால், விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்' என, கோரினார்.இதை காங்கிரசின், மற்ற உறுப்பினர்களும் ஆமோதித்தனர். 'விவாதிக்க வேண்டும்; அரசு பதிலளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, 'நீங்கள் நோட்டீஸ் அளிக்கவில்லை. என் கவனத்துக்கும் கொண்டு வரவில்லை. திடீரென விவாதிக்க வேண்டும் என்றால் எப்படி. 'இது என்ன சட்டசபையா, திருவிழாவா. சபையை விதிமுறைப்படி நடத்த வேண்டும். குறைந்தபட்சம் இத்தகைய விஷயங்களை விவாதிக்கும் முன்னரே, நோட்டீஸ் அளிக்கும் அறிவு இல்லை என்றால் எப்படி. திடீரென அனுமதி அளிக்க முடியாது' என, அதிருப்தி தெரிவித்தார்.'இதை பொருட்படுத்தாமல், உறுப்பினர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். 'பொறுமை இழந்த சபாநாயகர், 'எம்.எல்.ஏ.,வாகி நான்கரை ஆண்டுகளாகின்றன. ஒரு நோட்டீஸ் கொடுக்காமல், விவாதிக்க வாய்ப்பு கேட்டு நெருக்கடி கொடுப்பது சரியல்ல; உங்கள் தலைவராவது, உங்களுக்கு புத்திமதி கூற வேண்டும். இது சட்டசபை. விதிமுறைப்படிதான் நான் நடத்துவேன்,' என்றார்.அப்போது இடைமறித்த, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ''இது உணர்வுபூர்வமான விஷயம். எஸ்.டி., சமுதாய மடாதிபதிகள், இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி கேட்டு, 208 நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். ''நானே போராட்ட இடத்துக்கு சென்று, சுவாமிகளுடன் பேச்சு நடத்தினேன். இது முக்கியமான விஷயம் என்பதால், விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும். நீங்கள் பொறுமை இழக்காதீர்கள்,'' என்றார்.சபாநாயகர், 'நான் பொறுமை இழக்கவில்லை. மிகவும் பொறுமையுடன் சபையை நடத்துகிறேன். 'நோட்டீஸ் அளிக்காமல் வாய்ப்பு கேட்கின்றனர். எம்.எல்.ஏ.,வாகி நான்கரை ஆண்டுகளாகின்றன. ஒரு விஷயம் பற்றி, நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி விவாதிக்க முடியும்' என, கேள்வியெழுப்பினார்.அப்போது சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, ''விதிமுறைப்படி, சட்டசபையை நடத்த வேண்டும். உறுப்பினர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.அதன்பின், கூட்டம் சுமுகமாக நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X