கூரியரில் கள்ள நோட்டு வரவைத்து புழக்கத்தில் விட்ட வாலிபர் சிக்கினார்

Added : செப் 14, 2022 | |
Advertisement
சென்னை:ஆந்திர மாநிலத்திலிருந்து கூரியரில் கள்ள நோட்டுகளை வரவழைத்து, சென்னையில் புழக்கத்தில் விட்டவரை, போலீசார் கைது செய்தனர்.வேளச்சேரி, காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ், 40. நேற்று முன்தினம் இவரது பெயருக்கு, பள்ளிக்கரணையில் செயல்படும் ஒரு கூரியர் நிறுவனம் வாயிலாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு கூரியர் வந்துள்ளது.இவருக்கு, ஏற்கனவே மூன்று முறை இதே ஆந்திரா முகவரியில்

சென்னை:ஆந்திர மாநிலத்திலிருந்து கூரியரில் கள்ள நோட்டுகளை வரவழைத்து, சென்னையில் புழக்கத்தில் விட்டவரை, போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி, காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ், 40. நேற்று முன்தினம் இவரது பெயருக்கு, பள்ளிக்கரணையில் செயல்படும் ஒரு கூரியர் நிறுவனம் வாயிலாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு கூரியர் வந்துள்ளது.
இவருக்கு, ஏற்கனவே மூன்று முறை இதே ஆந்திரா முகவரியில் இருந்து கூரியர் வந்ததால் சந்தேகமடைந்த கூரியர் நிறுவனம், அந்த பார்சலை 'ஸ்கேன்' செய்தது. அதில், பணம் இருந்தது.உடனே, சதீசை வரவழைத்த அந்நிறுவனம், அவர் முன்னாலேயே பார்சலை திறக்குமாறு கூறியது.
அவர் திறந்த போது, 100, 200, 500 தாளில், 8,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. பின்னர் சதீசை, வேளச்சேரி போலீசில் ஒப்படைக்க, போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:சமூக வலைதளம் வழியாக, ஆந்திராவை சேர்ந்த பெயர், முகவரி தெரியாத நபர் சதீசுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். மொபைல் போனில் உரையாடி உள்ளனர். ஆந்திரா நபர், 3,000 ரூபாய் கொடுத்தால், 8,000 ரூபாய் கள்ள நோட்டு தருவதாகவும், அதை சில்லரை கடைகளில் மாற்றி லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
குறுக்கு வழியில் பணக்காரனாக நினைத்த சதீஷ், மூன்று முறை 9,000 ரூபாய் அனுப்பி, 24 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பெற்றுள்ளார்.இதை, சென்னை முழுதும் உள்ள சாலையோர கடைகளில் புழக்கத்தில் விட்டு, லாபம் சம்பாதித்துள்ளார். சென்னையில் இவரைப் போல் வேறு நபர்கள் இருக்கின்றனரா, எங்கெல்லாம் கள்ள நோட்டை மாற்றினார் என விசாரிக்கிறோம்.
சதீஷிடம் தொடர்பு வைத்திருந்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் யார், இதற்கு மூளையாக செயல்படுவது யார் என விசாரிக்கிறோம். விரைவில், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை கைது செய்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X