ஆழ்துளை கிணறு தோண்டுவதில் முறைகேடு; விசாரணைக்கு முதல்வர் பொம்மை உறுதி

Added : செப் 14, 2022 | |
Advertisement
பெங்களூரு,-''கங்கா - கல்யாணா திட்டத்தின் கீழ், ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டசபையில் தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் யதீந்திரா கேள்விக்கு, சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி பதிலளித்தார்.இந்த பதில் திருப்தியாக இல்லாததால், காங்.,



பெங்களூரு,-''கங்கா - கல்யாணா திட்டத்தின் கீழ், ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டசபையில் தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் யதீந்திரா கேள்விக்கு, சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி பதிலளித்தார்.இந்த பதில் திருப்தியாக இல்லாததால், காங்., உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின் முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்து, கூறியதாவது:கங்கா - கல்யாணா திட்டத்தின் கீழ், சரியான நேரத்துக்கு, ஆழ்துளை கிணறுகள் தோண்டவில்லை. சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் இடையே, ஆழ்துளை கிணறுகள் தோண்டும் செலவில் வித்தியாசம் உள்ளது.தகுதியற்ற ஒப்பந்ததாரர்கள், பொய்யான சான்றிதழ் தாக்கல் செய்து, ஆழ்துளை கிணறுகள் தோண்டிய குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தப்படும்.அம்பேத்கர் வளர்ச்சி கார்ப்பரேஷன் சார்பில், கங்கா - கல்யாணா திட்டத்தின் கீழ், ஆழ்துளை கிணறுகள் தோண்டி, இரண்டு, மூன்று ஆண்டுகளாகியும், மின் இணைப்பு அளிக்கவில்லை. இதுபோன்ற நடைமுறை, 15 -- 20 ஆண்டுகளாக இருந்தது. வேறு அரசுகள், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தன. பல மாற்றங்கள் கொண்டு வந்தன.நடப்பாண்டு கங்கா -- கல்யாணா திட்ட பயனாளிகள் கணக்கில், பணம் செலுத்தப்படுகிறது. 2018 -- 19ம் ஆண்டில், தோண்ட வேண்டிய ஆழ்துளை கிணறுகள் பாக்கியுள்ளன. விரைவில் இவற்றை தோண்டி, மின் இணைப்பு வழங்கப்படும்.சமீபத்தில் கன மழை பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ஆழ்துளை கிணறு தோண்டுவோரிடம், பம்ப் பொருத்துவது, மின் இணைப்பு ஏற்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆழ்துளை கிணற்றை ஒருவர் தோண்டினால், மற்றொருவர் மின் இணைப்பு ஏற்படுத்தினர். இதனால் தாமதமானது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X