செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 14, 2022 | |
Advertisement
194 பயனாளிகளுக்கு நல உதவிஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், அம்மம்பாக்கம் ஊராட்சியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், தாசில்தார் அருண்குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் சரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலால் உதவி ஆணையர் பரமேஸ்வரி பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில்

194 பயனாளிகளுக்கு நல உதவி
ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், அம்மம்பாக்கம் ஊராட்சியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், தாசில்தார் அருண்குமார் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் சரசு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலால் உதவி ஆணையர் பரமேஸ்வரி பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை 21, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 6, விதவை உதவித்தொகை 44, முதியோர் உதவித்தொகை 30, உள்ளிட்ட 194 பயனாளிகளுக்கு, 5 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெண் விவசாய சங்க மாநாடு

பேரம்பாக்கம்: தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் சார்பில், களஞ்சியம் பெண் விவசாய சங்கத்தின் 25வது மாநில மாநாடு பேரம்பாக்கத்தில் நேற்று துவங்கியது. விழாவுக்கு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாநில தலைவர் ஷீலு தலைமை தாங்கினார்.

பயிர் காப்பீடு வேளாண் உதவி இயக்குனர் அனிதா, திருவூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி, கடம்பத்துார் வேளாண் உதவி இயக்குனர் தீபிகா மற்றும் உதவி விதை அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

'பெண்களும் நில உரிமையும்' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில், கோவில் நிலங்களை பெண் விவசாயிகளுக்கு குறைந்த குத்தகையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா தெரிவித்தார்.

மாணவர் துாக்கிட்டு தற்கொலை

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் மோகன், 18. இவர், சில தினங்களுக்கு முன் கல்லுாரியில் சேர்ந்தார். இவரது தாயார் ராதிகா, எட்டு மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் மோகன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, மோகன் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X