அருப்புக்கோட்டையில் தேவை: அரசு சென்ட் தொழிற்சாலை

Added : செப் 14, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விளையும் மல்லிகை பூ புகழ் பெற்றது. அதிக மணம் உடையது. அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள தமிழ்பாடி, தொட்டியான் குளம், கோவிலாங்குளம், மடத்துப்பட்டி, புதுப்பட்டி, எர்ரம்பட்டி, கட்டங்குடி, செம்பட்டி, சித்தலகுண்டு, தமிழ் பாடி, நந்தி குண்டு கிராமங்களில் மல்லிகை பூ விவசாயம் அதிக அளவில் நடக்கிறது.மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி



அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விளையும் மல்லிகை பூ புகழ் பெற்றது. அதிக மணம் உடையது. அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள தமிழ்பாடி, தொட்டியான் குளம், கோவிலாங்குளம், மடத்துப்பட்டி, புதுப்பட்டி, எர்ரம்பட்டி, கட்டங்குடி, செம்பட்டி, சித்தலகுண்டு, தமிழ் பாடி, நந்தி குண்டு கிராமங்களில் மல்லிகை பூ விவசாயம் அதிக அளவில் நடக்கிறது.மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் அதிக அளவில் மல்லிகை பூக்கள் விளையும். அருப்புக்கோட்டை மார்க்கெட்டிற்கு மட்டும் ஒரு நாளைக்கு 5 டன் மல்லிகை விற்பனைக்கு வரும். விளைச்சல் இல்லாத காலங்களில் 2 டன்கள் வரும். சீசன் உள்ள காலங்களில் நிலக்கோட்டையில் உள்ள சென்ட் பாக்டரிக்கும், சிங்கப்பூருக்கும் மல்லிகை பூ ஏற்றுமதி ஆகிறது. சாதாரண நாட்களில் மதுரை, திருச்செந்தூர், தோவாளை உட்பட பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள சீதோஷன நிலை, மண்ணின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப அருப்புக்கோட்டையை சுற்றி விளையும் மல்லிகை நல்ல மணத்துடன் இருக்கும். இவற்றையே 'மதுரை மல்லி' என்று விற்கின்றனர்.அருப்புக்கோட்டை பகுதியில் அதிக அளவில் மல்லிகை பூ விளைவிப்பதால் இந்தப் பகுதியில் ஒரு சென்ட் தொழிற்சாலை அமைய வேண்டும் என்பது இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. சென்ட் பேக்டரி இங்கு அமைந்தால் தொழிற்சாலைக்கு அதிக மல்லிகை பூ கிடைப்பதுடன் விளைவிக்கும் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதனாலேயே அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் மல்லிகை சென்ட் பேக்டரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அறிக்கையில் தவறாமல் இடம்பெறும். மல்லிகைப்பூ அதிக விளைச்சல் தரும் காலங்களில் வியாபாரிகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பூக்களை வாங்கிச் செல்கின்றனர். சில நேரங்களில் மல்லிகை பூ விற்பனையாகாமல் வீணாகப் போய் விடுவதும் உண்டு. இதை கருத்தில் கொண்டு அரசு இந்த பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்தால், மல்லிகை பூ விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், தொழிற்சாலைகளில் பணிபுரிய பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X