விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு பயிற்சி மையம் தேவை

Added : செப் 14, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டைவிசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல விசைத்தறி பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென விசைத்தறி நெசவாளர்கள் விரும்புகின்றனர்.அருப்புக்கோட்டை நெசவு தொழிலுக்கு புகழ் பெற்றது. பாரம்பரியமாக இந்த தொழிலை நெசவாளர்கள் செய்து வருகின்றனர். நகரில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.நூல்



அருப்புக்கோட்டை

விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல விசைத்தறி பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென விசைத்தறி நெசவாளர்கள் விரும்புகின்றனர்.அருப்புக்கோட்டை நெசவு தொழிலுக்கு புகழ் பெற்றது. பாரம்பரியமாக இந்த தொழிலை நெசவாளர்கள் செய்து வருகின்றனர். நகரில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி போன்ற பிரச்சனைகளால் தொழில் செய்ய முடியாமல் நெசவாளர்கள் தவிக்கின்றனர்.


இவர்களது நீண்ட கால கோரிக்கைகள்


விசைத்தறி நெசவாளர்களுக்கு மீண்டும் நல வாரியம் அமைக்க வேண்டும். மதுரை மாட்டுத்தாவணி அருகில், 'ஜவுளி விற்பனைச் சந்தை' ஒன்றை உருவாக்க வேண்டும். இதனால் அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில், தேனி, புளியங்குடி, தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை உட்பட பகுதிகளில் உள்ள நெசவாளர்கள் பயன் பெறுவர். நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும். மானிய விலையில் நூல் வழங்க நூல் வங்கி அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல விசைத்தறி பயிற்சி மையம் அமைக்க வேண்டும். விசைத்தறி தொழிலை நவீனப்படுத்த கம்ப்யூட்டர் ஜக்காடு வாங்க மானியத்துடன் தொழில் மையம் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாரம்பரிய நெசவுத்தொழிலை பாதுகாத்திட வேண்டிய நடவடிக்கைகளை அரசு செய்திட வேண்டும். ஜவுளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி., வரியை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். ஜிஎஸ்டி., வரி செலுத்துவோர் இறந்தால் குடும்ப நல நிதி வழங்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X