அறிவிப்போடு நின்று போன பல் மருத்துவக் கல்லூரி

Added : செப் 14, 2022 | |
Advertisement
விருதுநகர்: விருதுநகரில் பல் மருத்துவக் கல்லுாரி கட்ட நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் பணி துவங்கப்பட வில்லை.தமிழகத்தில் சென்னையில் மட்டுமே பல் மருத்துவக் கல்லுாரி உள்ள நிலையில் இரண்டாவதாக விருதுநகரில் ரூ. 50 கோடியில் அரசு பல் மருத்துவக் கல்லுாரி அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். விருதுநகர் அரசு மருத்துவக்



விருதுநகர்: விருதுநகரில் பல் மருத்துவக் கல்லுாரி கட்ட நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் பணி துவங்கப்பட வில்லை.தமிழகத்தில் சென்னையில் மட்டுமே பல் மருத்துவக் கல்லுாரி உள்ள நிலையில் இரண்டாவதாக விருதுநகரில் ரூ. 50 கோடியில் அரசு பல் மருத்துவக் கல்லுாரி அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி அருகில் பல் மருத்துவக் கல்லுாரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கென 2017ல் சிறப்பு அலுவலராக சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி அருகில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மருத்துவக் கல்வி இயக்குனர், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல் மருத்துவ கல்லுாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் என அறிவிப்பு பலகை மட்டுமே உள்ளதே தவிர அந்த இடம் புதர்மண்டி பாழடைந்து கிடக்கிறது.இத்திட்டம் துவங்கப்பட்டால் விருதுநகரில் இருந்து 100 பல் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு கிடைப்பதுடன் தென் மாவட்ட மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X