வன்கொடுமையால் பாதிப்பு மறுவாழ்விற்கு நிதி எவ்வளவு?உயர் நீதிமன்றம் கேள்வி

Added : செப் 15, 2022 | |
Advertisement
மதுரை:வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தினரின் மறுவாழ்விற்கு ஒதுக்கிய, செலவிட்ட தொகை விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வாடிப்பட்டி பொட்டுலுபட்டி தனபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:தமிழகத்தில் 2001 - 2015 வரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டனர். 363

மதுரை:வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தினரின் மறுவாழ்விற்கு ஒதுக்கிய, செலவிட்ட தொகை விபரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

வாடிப்பட்டி பொட்டுலுபட்டி தனபால் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:தமிழகத்தில் 2001 - 2015 வரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த 471 பேர் கொலை செய்யப்பட்டனர். 363 பேர் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகினர். இவர்களின் குடும்பத்தினருக்கு வீடு, வேலை அல்லது நிலம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, அந்த மனுவை விசாரித்து நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், 'பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மறுவாழ்விற்காக வேலைவாய்ப்பு, இழப்பீடு, இலவச வீட்டுமனை பட்டா உட்பட நல உதவிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது?இந்த விபரங்களை, தமிழக உள்துறை செயலர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் மூன்று வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X