ஓய்வு தாசில்தார்களுக்கு பணி சி.எம்.டி.ஏ., அவசர அழைப்பு| Dinamalar

ஓய்வு தாசில்தார்களுக்கு பணி சி.எம்.டி.ஏ., அவசர அழைப்பு

Added : செப் 15, 2022 | |
சென்னை:வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையை ஒட்டிய பகுதிகளில் நில தொகுப்பு திட்டத்தில் பணி புரிய, ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சி.எம்.டி.ஏ., அவசர அழைப்பு விடுத்துள்ளது.சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் - மீஞ்சூர் இடையே, 62 கி.மீ., தொலைவுக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 122 மீ., அகலம் உள்ள இந்த

சென்னை:வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையை ஒட்டிய பகுதிகளில் நில தொகுப்பு திட்டத்தில் பணி புரிய, ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சி.எம்.டி.ஏ., அவசர அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் - மீஞ்சூர் இடையே, 62 கி.மீ., தொலைவுக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 122 மீ., அகலம் உள்ள இந்த சாலையில், 50 மீ., அகல பகுதி எதிர்கால பயன்பாட்டுக்காக இருப்பு வைக்கப்பட்டது.


இந்த நிலத்தில், வணிக ரீதியிலான திட்டங்கள் செயல்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. வெளிவட்ட சாலையின், 50 மீட்டருடன் அதை ஒட்டிய அரசு நிலங்களை நில தொகுப்பு திட்டத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக, ஏற்கனவே ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சில வருவாய் துறை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், நில தொகுப்பு திட்ட பணிகளுக்கு, ஓய்வு பெற்ற தலா மூன்று வட்டாட்சியர்கள், நில அளவையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பம் உடைய நபர்கள், செப்., 16க்குள் எழும்பூர் சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் வெளிவட்ட சாலைக்கான மூத்த திட்ட அதிகாரியை நேரில் அணுகவும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தகுதி உடைய நபர்கள், தங்களது விபர குறிப்பை, ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர், செல்வ அரசுவுக்கு, 94436 24898 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு அனுப்பலாம் என, சி.எம்.டி.ஏ., சார்பில் வெளிவட்ட சாலை திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அறிவித்துள்ளார்.


சி.எம்.டி.ஏ.,வின் ஒரு குறிப்பிட்ட திட்ட பணிக்கான நபர்களை தேர்வு செய்யும் போது, அதற்கான உரிய வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் சார்பில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலரை தனிப்பட்ட முறையில் அணுகும் வகையில், இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதில் ஏதாவது முறைகேடு நடந்தால், அதற்கு யார் பொறுப்பு ஏற்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நகரமைப்பு வல்லுனர்கள்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X