பழனி பைபாஸ் பாலம் திண்டுக்கல் நுழைவு வாயிலில்சாலையில் தேங்கும் கழிவுநீரால் பயணிகள் தத்தளிப்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
திண்டுக்கல்--திண்டுக்கல் நுழைவுவாயில் பழனி பைபாஸ் பாலம் ரோட்டில் மழை நீர் செல்ல வழியின்றி மாதக்கணக்கில் தேங்க கழிவு நீராக மாறி ,அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள்,பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் படாதபாடு படுகின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்கள், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து திண்டுக்கல் வருவோருக்கு பழனி பைப்பாஸ் பாலம் திண்டுக்கல் நுழைவுவாயிலாக
பழனி பைபாஸ் பாலம் திண்டுக்கல் நுழைவு வாயிலில்சாலையில் தேங்கும் கழிவுநீரால் பயணிகள் தத்தளிப்பு



திண்டுக்கல்--திண்டுக்கல் நுழைவுவாயில் பழனி பைபாஸ் பாலம் ரோட்டில் மழை நீர் செல்ல வழியின்றி மாதக்கணக்கில் தேங்க கழிவு நீராக மாறி ,அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள்,பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் படாதபாடு படுகின்றனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்கள், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து திண்டுக்கல் வருவோருக்கு பழனி பைப்பாஸ் பாலம் திண்டுக்கல் நுழைவுவாயிலாக உள்ளது. கோவை, திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் இவ்வழியாக செல்வது வழக்கம். தினமும் 150க்கு மேற்பட்ட பஸ்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. இங்குள்ள ரோட்டில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் மாதக்கணக்கில் தேங்கி கழிவுநீராக மாறுகிறது. சாலையில் தேங்கி சுகாதார சீர் கேடையும் ஏற்படுத்துகிறது.மழை பெய்தால் ரோடு முழுவதும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து ஆறாக ஓடுவதால் பயணிகள், வாகன ஓட்டிகள்பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாதி ரோடு வரை தேங்குவதால் டூவிலரில் வருவோர் வழுக்கி விழுவதும் தொடர்கிறது.ஆண்டுக்கணக்கில் தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காது நெடுஞ்சாலை,உள்ளாட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன.


கொசு




உற்




பத்




திக்கு வழி


சுரேஷ், கடை உரிமையாளர்: மழை நீர் செல்ல வழி இல்லாததால் கழிவு நீராக தேங்குகிறது. இதனால் கொசுக்கள் பெருகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பயணிகள் முகம் சுளித்தப்படி தேங்கி நிற்கும் நீரில் நின்றப்படி பஸ்களில் ஏறுகின்றனர்.இங்கு நிழற் குடை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்,என்றார்.


விபத்து ஏற்படுகிறது


மாப்பிள்ளை மீரான், மா.மூ.கோவிலுார், திண்டுக்கல்:சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பஸ், ஷேர் ஆட்டோக்கள் நடு ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றுகின்றன. இதனால் பின் வரும் வாகனங்களால் விபத்துக்கும் வழி வகுக்கிறது. அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.


விரைவில் நடவடிக்கை


பி.டி.ஓ.,மலரவன்: கழிவு நீர் செல்வதற்கான வழியை ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X