தீர்வு காணுங்க தினசரி பஸ்களில் தொடரும் மாணவர்கள் சாகச பயணம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
நத்தம்: திண்டுக்கல் -மாவட்டத்தில் காலை,மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால் விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க காலை, மாலை வேலைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் .மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் அரசு, தனியார் பள்ளிகள் என
தீர்வு காணுங்க தினசரி பஸ்களில் தொடரும் மாணவர்கள் சாகச பயணம்

நத்தம்: திண்டுக்கல் -மாவட்டத்தில் காலை,மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதனால் விபரீதங்கள் ஏற்படாமல் தடுக்க காலை, மாலை வேலைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் .மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் அரசு, தனியார் பள்ளிகள் என 1973 பள்ளிகள் ,அரசு, தனியார் கல்லுாரிகளும் இயங்குகின்றன.இதில் ஏராளமான மாணவர்கள் கிராமங்களில் இருந்து நகர்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். ஒரு சில தனியார் பள்ளி, கல்லுரிகள் மட்டும் தங்களது சொந்த வாகனங்களில் மாணவர்களை ஏற்றி வருகின்றன. மற்றபடி பெரும்பாலான மாணவர்கள் காலை பள்ளி செல்லவும், மாலையில் வீடு திரும்பவும் அரசு ,தனியார் பஸ்களையே நம்பி உள்ளனர். மாணவர்கள் சென்று வர காலை, மாலை வேலைகளில் கூடுதல் பஸ்களை இயக்காதது, பல கிராமங்களில் அரசு பஸ் வசதி இல்லாதது, திடீரென பஸ்கள் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதை பார்ப்போருக்கு விபரீதம் நடந்து விடுமோ என்று மனம் பதறுகிறது. காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் ,பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர் என கூடுதலானோர் பஸ்களில் பயணிக்கின்றனர்.

இதனால் தினமும் அடித்துப் பிடித்து பஸ்சில் இடம் பிடித்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி காலை ,மாலை வேலைகளில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.................

தேவை விழிப்புணர்வு

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காலை, மாலை வேலைகளில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளிலும், ஜன்னல்களிலும் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். தினசரி இந்த காட்சிகளை அனைத்து பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. இதை காணும் பெற்றோர்கள் முதல் அனைவரின் மனமும் பதறுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்வதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், போலீசார் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.எல்.ஆர்.கார்த்திகேயன், நிர்வாக இயக்குனர், லட்சுமண மோட்டார்ஸ், நத்தம்.................


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X