பழங்குடியின நலத்துறை இயக்குனர் ராசிமலையில் ஆய்வு

Added : செப் 15, 2022 | |
Advertisement
தேவதானப்பட்டி--ராசிமலை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டதை பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சளாறு அணை கிராமத்திற்கு மேலே அமைந்துள்ளது ராசி மலை. இங்கு 50க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பழங்குடியினருக்கு 35 வீடுகள்
பழங்குடியின நலத்துறை இயக்குனர் ராசிமலையில் ஆய்வு



தேவதானப்பட்டி--ராசிமலை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டதை பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சளாறு அணை கிராமத்திற்கு மேலே அமைந்துள்ளது ராசி மலை. இங்கு 50க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பழங்குடியினருக்கு 35 வீடுகள் கட்டப்பட்டது.இரு ஆண்டுகளாகியும் வீடுகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதி மக்கள் கலெக்டர் முரளீதரனிடம் தங்களுக்கு வீடு வழங்க மனு அளித்தனர்.நேற்று மாநில பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ராசிமலையில் உள்ள வீடுகளை பார்வையிட்டார். மக்களின் வேலைவாய்ப்பு,பொருளாதர நிலை குறித்து கேட்டறிந்தார். தங்களுக்கு வீடு வழங்க பழங்குடியின மக்கள் கோரினர். 'விரைவில் வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என அண்ணாதுரை தெரிவித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சாந்தி, தாசில்தார் ராணி, தேவதானப்பட்டி ஆர்.ஐ.,கனகமணி, வி.ஏ.ஓ.,முருகன் உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X