பஸ் கிடைக்காமல் தொடரும் சிக்கல் திருக்கழுக்குன்றம் பயணியர் பரிதவிப்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
திருக்கழுக்குன்றம்:தாலுகா, வட்டார வளர்ச்சி தலைமையிடமான திருக்கழுக்குன்றத்தில் சார் - பதிவாளர், வேளாண் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் ஆகியவை இயங்குகின்றன.தாலுகா பகுதியின் வர்த்தக இடமாகவும் விளங்குவதால், மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பகுதியினர், அத்தியாவசிய தேவைகளுக்காக,
பஸ் கிடைக்காமல் தொடரும் சிக்கல் திருக்கழுக்குன்றம் பயணியர் பரிதவிப்பு

திருக்கழுக்குன்றம்:தாலுகா, வட்டார வளர்ச்சி தலைமையிடமான திருக்கழுக்குன்றத்தில் சார் - பதிவாளர், வேளாண் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வங்கிகள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் ஆகியவை இயங்குகின்றன.
தாலுகா பகுதியின் வர்த்தக இடமாகவும் விளங்குவதால், மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பகுதியினர், அத்தியாவசிய தேவைகளுக்காக, திருக்கழுக்குன்றம் வருகின்றனர். இங்கிருப்போர் செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றனர்.இங்குள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலத்திற்காக, பக்தர்கள் குவிகின்றனர்.


குறைவு

இச்சூழலில், அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாமல், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் வழியே செல்கின்றன.பல ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன.
பிற இடங்களிலிருந்து புறப்படும் பேருந்து, கூட்ட நெரிசலுடன் வருவதால், திருக்கழுக்குன்றம் பயணியர், அதில் எளிதில் செல்ல இயலவில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி, வேலை என, தினமும் செல்வோர் அவதிப்படுகின்றனர். குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கல்வி, பணி, மருத்துவம் பாதிக்கப்படுகிறது.பயணியர் கூறியதாவது:திருக்கழுக்குன்றத்திலிருந்து செங்கல்பட்டு, தாம்பரத்திற்கும், பிற பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கும், காலை, மாலையில் கூடுத லாக அரசு பேருந்துகள் இயக்கினால், இப்பகுதியினர் எளிதாக செல்வர். ஷேர் ஆட்டோவில், அதிக கட்டணம் கொடுத்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது.


வலியுறுத்தல்

இது ஒருபுறமிருக்க, சென்னை மாநகர் பேருந்து இயக்க எல்லை, 12 ஆண்டுகளுக்கு முன், 50 கி.மீ.,க்கு நீட்டிக்கப்பட்டது.இதையடுத்து, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 30 கி.மீ., தொலைவிற்கு, மாநகர் பேருந்துகள் ஏராளமாக இயக்கப்படுகின்றன.தாம்பரம் - திருக்கழுக்குன்றம் இடையே, 45 கி.மீ., தொலைவே உள்ளதால், செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மாநகர் பேருந்துகளை, திருக்கழுக்குன்றம் வரை நீட்டிக்கலாம்.
இவ்வாறு நீட்டித்தால், இப்பகுதி பயணியர் பெரிதும் பயன்பெறுவர். இதுகுறித்து, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், நடவடிக்கை இன்றி புறக்கணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X