மழை பெய்தும் நீர் வரத்து இல்லாத அதிகாரி கண்மாய் ஒரு போக சாகுபடிக்கு திண்டாடும் கோத்தலுாத்து விவசாயிகள்

Added : செப் 15, 2022 | |
Advertisement
ஆண்டிபட்டி--ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் அதிகாரி கண்மாய்க்கு நீர் வரத்து இல்லாததால் கண்மாயை நம்பி உள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி ஒன்றியம் கோத்தலூத்து அதிகாரி கண்மாய் 300 ஏக்கர் பரப்பிலானது. மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நாகலாறு ஓடை, மறவபட்டி ருத்ராயப்பெருமாள் கோயில் ஓடை மூலம் கண்மாய்க்கு
மழை பெய்தும் நீர் வரத்து இல்லாத அதிகாரி கண்மாய் ஒரு போக சாகுபடிக்கு திண்டாடும் கோத்தலுாத்து விவசாயிகள்



ஆண்டிபட்டி--ஆண்டிபட்டி பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்தும் அதிகாரி கண்மாய்க்கு நீர் வரத்து இல்லாததால் கண்மாயை நம்பி உள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி ஒன்றியம் கோத்தலூத்து அதிகாரி கண்மாய் 300 ஏக்கர் பரப்பிலானது. மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நாகலாறு ஓடை, மறவபட்டி ருத்ராயப்பெருமாள் கோயில் ஓடை மூலம் கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கும். கண்மாய் நீரில் மறவபட்டியில் சில நூறு ஏக்கரில் நேரடி பாசன வசதி பெற்றது.ஒருமுறை கண்மாய் நிரம்பினால் கொத்தப்பட்டி, கோத்தலூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி, மொட்டனூத்து, எரதிமக்காள்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும். 15 ஆண்டுக்கு மேலாக கண்மாய் நிரம்ப வில்லை. இதனால் பல நுாறு ஏக்கரில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்து விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. மழை பெய்தால் மட்டுமே மானாவாரி விவசாயம் நடைபெறும். விவசாயத்திற்கான மண் வளம் இருந்தும் தண்ணீர் வசதியின்றி விவசாயத்தை கைவிட்டு பலரும் மாற்று தொழிலுக்கு செல்கின்றனர். இப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:


ஒரு போக சாகுபடிக்கும் திண்டாட்டம்


வி.மல்லையசாமி, ஒன்றிய விவசாய இளைஞர் அணி தலைவர்: வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து இருந்து வரும் நாகலாறு ஓடை நீர் கொத்தப்பட்டி புல்வெட்டி கண்மாயை நிரம்பச் செய்த பின் அதிகாரி கண்மாய்க்கு வந்து சேரும். நாகலாறு ஓடை பல இடங்களில் தூர்வாராமல் புதர் மண்டியுள்ளது. கனமழை பெய்தால் கண்மாய் பள்ளங்களில் நீர் தேங்குகிறது. தொடர்ச்சியான நீர் வரத்து இருந்தால் முழு அளவில் தேங்கும். 2008ம் ஆண்டுக்குப் பின் கண்மாய்க்கு முழு அளவில் நீர் வந்து இல்லை. 15 ஆண்டாக கண்மாய் முழுமையாக நிரம்பாததால் மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கு திண்டாடும் நிலை உள்ளது.


விளை




ச்சல்




பாதிப்பை




கண்டு கொள்ளாத அரசு


ஏ.சதீஷ்குமார், விவசாயி, கன்னியப்பபிள்ளைபட்டி: கண்மாய் நீர் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறை பராமரிப்பு செய்வதில்லை. மழைக்காலங்களில் விவசாயிகள் தன்னார்வ குழுக்கள் ஏற்படுத்தி கால்வாயில் அடைப்பை சரி செய்து வருகின்றனர். இருப்பினும் கண்மாய்க்கு தண்ணீர் முழு அளவில் கிடைக்கவில்லை. விவசாயத்தை தொடர முடியாத பலரும் நிலங்களை விற்றுவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். கால்நடை வளர்ப்பும் பாதித்துள்ளது. வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் விவசாயத்தை தவிர்த்து வெளியூர் செல்கின்றனர். விளைச்சல் குறைவது பற்றி அரசும் அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை.


அணை உபரி நீரை




கண்மாய்களில் தேக்கும் திட்டம்


எஸ்.ரவி, விவசாயி, கன்னியப்பபிள்ளைபட்டி: கதிர்நரசிங்கபுரம் மாட்டுப்பாலத்தில் இருந்து ஒரு கி.மீ.,நீளத்திற்கு நீர்வரத்து கால்வாய் அகலம் 3 அடி மட்டுமே உள்ளது. மற்ற இடங்களில் 30 முதல் 40 அடி அகலம் உள்ளது. கால்வாயின் குறுகலான பகுதியால் கண்மாய் நீர் வரத்து பாதிக்கிறது. ருத்ராயப் பெருமாள் கோயிலில் இருந்து வரும் ஓடை தூர்வாரப்படாததால் கண்மாய் நீர் திசை மாறி செல்கிறது. கால்வாயை அகலப்படுத்த வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஆண்டிபட்டி ஒன்றியத்தின் தென் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாற்று தொழிலுக்கும் வழியில்லை. இப் பகுதியில் விவசாயத்தை காக்க முல்லைப்பெரியாறு அணையில் கிடைக்கும் உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியிலிருந்து குழாய் மூலம் கொண்டு வந்து கண்மாய்களில் தேக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடுகின்றனர். அரசின் நடவடிக்கை தான் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X