அடிக்கடி மின் தடைஅமைச்சர் 'டோஸ்'

Added : செப் 15, 2022 | |
Advertisement
தர்மபுரி:பென்னாகரத்திலுள்ள, மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தபோது, அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால், அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பாக புதிய ஆரம்ப, சுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்புகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அடிக்கடி மின் தடைஅமைச்சர் 'டோஸ்'

தர்மபுரி:பென்னாகரத்திலுள்ள, மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தபோது, அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால், அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பாக புதிய ஆரம்ப, சுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்புகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.அன்று மாலை, 6:15 மணிக்கு பென்னாகரத்திலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் சென்றபோது, அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டது.

உடன் வந்த தி.மு.க., வினர் மற்றும் மருத்துவர்கள் தங்களது மொபைல் போனிலுள்ள, 'டார்ச் லைட்' வெளிச்சத்தில் அவரை, மருத்துவமனைக்குள் அழைத்து சென்றனர்.இதனால், கடுப்பான அமைச்சர் சுப்பிரமணியன், ''அடுத்த முறை இங்கு வரும்போது, மருத்துவமனையில் மின் வசதி இருக்க வேண்டும்,'' என, அதிகாரிகளை கடிந்து கொண்டதுடன், ''இந்த ஊருக்கு மாலை நேரத்தில் ஆய்வுக்கு வரக்கூடாது,'' எனக் கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இதனால், அமைச்சர் ஆய்வின்போது உடனிருந்த மாவட்ட கலெக்டர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X