சுரங்க அதிகாரி வீட்டில் சி.பி.சி.ஐ.டி., சோதனை

Added : செப் 15, 2022 | |
Advertisement
தர்மபுரி:தர்மபுரியிலுள்ள சுரங்கத் துறை இணை இயக்குனர் வீட்டில், நேற்று காலை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர். தர்மபுரி, சூடாமணி தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 47; இவர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கான, தமிழக அரசின் சுரங்கத் துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வந்தார்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஏரி, குளங்களில் கிராவல் மண்

தர்மபுரி:தர்மபுரியிலுள்ள சுரங்கத் துறை இணை இயக்குனர் வீட்டில், நேற்று காலை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.

தர்மபுரி, சூடாமணி தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 47; இவர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கான, தமிழக அரசின் சுரங்கத் துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வந்தார்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஏரி, குளங்களில் கிராவல் மண் எடுக்க விடுக்கப்பட்ட டெண்டரில் இணை இயக்குனராக பதவி வகித்த அவர், முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, சுரேஷ் முன்ஜாமின் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர், சென்னையிலுள்ள இயக்குனர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தர்மபுரி சூடாமணி தெருவிலுள்ள அவரது வீட்டில், நேற்று காலை 8:30 மணிக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பகல் 2:30 மணி வரை சோதனை நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X