கைதுக்கு பயந்து மீரா மிதுன் பெங்களூரில் தலைமறைவு?| Dinamalar

கைதுக்கு பயந்து மீரா மிதுன் பெங்களூரில் தலைமறைவு?

Added : செப் 15, 2022 | |
சென்னை:பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், பெங்களூரில் தலைமறைவாக உள்ளதாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'வீடியோ'பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டார் மீரா மிதுன். இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன.

சென்னை:பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், பெங்களூரில் தலைமறைவாக உள்ளதாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


'வீடியோ'


பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்டார் மீரா மிதுன். இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன. அதையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர்.பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


இந்த வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணையில் உள்ளது. சாட்சி விசாரணை நடந்தபோது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார்; மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத 'வாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு இருந்தார்.



தள்ளிவைப்பு


இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும், சாம் அபிஷேக் ஆஜரானார்; மீரா மிதுன் ஆஜராகவில்லை. போலீஸ் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, ''மீரா மிதுன் வசித்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர், தற்போது பெங்களூரில் தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,'' என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை, செப்., 28க்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X