ஆம் ஆத்மியின் சறுக்கல்கள் குறித்து குஜராத், ஹிமாச்சலில் பா.ஜ., பிரசாரம்

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஊழல் புகாரில் சிக்கியது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உட்பட பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிப்பது குறித்து குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., தலைவர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளனர். புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபில் நடந்த
ஆம் ஆத்மி  சறுக்கல்கள்  ,   குஜராத், ஹிமாச்சல் பா.ஜ.,

புதுடில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஊழல் புகாரில் சிக்கியது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உட்பட பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிப்பது குறித்து குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., தலைவர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.


latest tamil news



இந்நிலையில், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில மாதங்களில் குஜராத்தில் ஆறுக்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள், பொது மக்களை சந்தித்துப் பேசினார்.

புதுடில்லியில் சுகாதாரத் துறை மற்றும் கல்வியில் ஆம் ஆத்மி செய்துள்ள சாதனைகளை குறிப்பிட்டு மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். வரும் சட்டசபை தேர்தலில், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய சவாலாக ஆம் ஆத்மியை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.இதையடுத்து, புதுடில்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்த சறுக்கல்களை பட்டியலிட்டு, பா.ஜ.,
பிரசாரம் செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக, 'வீடியோ'க்களை புதுடில்லி பா.ஜ., தயாரித்துள்ளது. இவற்றை, குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச பா.ஜ.,வினர் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இதில், புதுடில்லி சட்டசபை தேர்தலின் போது அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஊழலை ஒழிப்போம் என, ஆம் ஆத்மி பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், புதுடில்லியில் நடந்த மதுபான ஊழல் குறித்து பிரசாரம் செய்து பா.ஜ., பதிலடி தருகிறது.குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுடன் புதுடில்லி மாநகராட்சி தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என பா.ஜ., தலைவர்கள் திட்டமிடுகின்றனர். அப்போது தான், அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனம் சிதறடிக்கப்படும்; இது பா.ஜ.,வின் வெற்றியை எளிதாக்கும் என அவர்கள் கருதுகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal s S - Gulbarga,இந்தியா
15-செப்-202205:57:31 IST Report Abuse
Thirumal s S கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. பிஜேபி பேசுது. சிரிப்பு
Rate this:
jayvee - chennai,இந்தியா
15-செப்-202210:43:05 IST Report Abuse
jayveeகுடுத்த வாக்குறுதிகளை நிறைவேறவில்லை .. திமுக உபீஸ் பேசுது.. சிரிப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X