நமீபியாவில் இருந்து வரும் சிறுத்தைகள்: பிறந்த நாளில் காட்டில் விடுகிறார் மோடி

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி-நமீபியாவில் இருந்து வரவழைக்கப்படும் எட்டு சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி தன் பிறந்த நாளான 17ம் தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார். நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-நமீபியாவில் இருந்து வரவழைக்கப்படும் எட்டு சிறுத்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி தன் பிறந்த நாளான 17ம் தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.



latest tamil news



நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது.

இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, சிறப்பு விமானத்தில் ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்தைகள், நமீபியாவில் இருந்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, வரும் 17ம் தேதி காலையில் அந்த விமானம் வருகிறது.அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து வரப்பட உள்ளன. தன் பிறந்த நாளான 17ம் தேதி, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.


latest tamil news



பல கட்ட சோதனைகள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின், இந்த எட்டு சிறுத்தைகளை, நமீபியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் சிறுத்தை பாதுகாப்பு அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. சிறுத்தைகளுடன், நமீபியா அதிகாரிகளும் உடன் வருகின்றனர்.தொடர்ந்து, 16 மணி நேரம் விமானத்தில் பயணித்து வரும் சிறுத்தைகளுக்கு வழியில் எந்த உணவும் வழங்கப்படாது. பிரதமரின் பிறந்த நாளில், குனோ பூங்காவில் அவற்றுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-செப்-202211:22:05 IST Report Abuse
பாமரன் மிருகக்காட்சி சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள சிங்கத்தின் ஓவியம் சூப்பர்... ஐ லைக் இட் .. அத மட்டும் திருப்பி உள்பக்கம் வச்சி கேட்டை தொறந்து வச்சாலும் சிங்கம் பார்த்துட்டு வேறே ஏதோ ஐந்து வெளியே இருக்குன்னு காட்டை விட்டு வெளியே வராது... 🤣🤣
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
15-செப்-202211:19:18 IST Report Abuse
பாமரன் . 😡
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
15-செப்-202210:48:30 IST Report Abuse
Anand அப்படியானால் இந்திய காடுகளில் இருப்பவை, அடிக்கடி ஊருக்குள் புகுபவை எல்லாம் சிறுத்தைகள் கிடையாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X