பேருந்து நிறுத்த வலியுறுத்தி வஞ்சுவாஞ்சேரியில் மறியல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், வஞ்சுவாஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து, வண்டலுார் - ஒரகடம் நெடுஞ்சாலையில் வழியே ஸ்ரீபெரும்புதுார் செல்லும் அரசு பேருந்து தடம் எண்:583, வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்ததில், சில வாரங்களாக நிற்காமல் சென்று வருகிறது.இதனால், காலை, மாலை
பேருந்து நிறுத்த வலியுறுத்தி வஞ்சுவாஞ்சேரியில் மறியல்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், வஞ்சுவாஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து, வண்டலுார் - ஒரகடம் நெடுஞ்சாலையில் வழியே ஸ்ரீபெரும்புதுார் செல்லும் அரசு பேருந்து தடம் எண்:583, வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்ததில், சில வாரங்களாக நிற்காமல் சென்று வருகிறது.இதனால், காலை, மாலை நேரங்களில், இந்த பேருந்திற்காக காத்திருக்கும் வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த மாணவர்கள், மாத்துார் அரசு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.இந்நிலையில், நேற்று காலை, மாத்துார் அரசு பள்ளிக்கு சென்ற மாணவர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து தடம் எண்:583 பேருந்தை மறித்து அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வஞ்சிவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் இந்த பேருந்து வழக்கம் போல் நின்று செல்ல வேண்டும்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் வாக்குறுதி அளிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி பேருந்தை எடுக்கவிடாமல் ஒரு மணி நேரம் மறியல் செய்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் தினமும் இந்த பேருந்து வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் என, எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X