ஓய்வூதியதாரர்களின் குறைதீர் கூட்டம் வரும் அக்.,16ல்ஓய்வூதியதாரர்களின்குறைதீர் கூட்டம்| Dinamalar

ஓய்வூதியதாரர்களின் குறைதீர் கூட்டம் வரும் அக்.,16ல்ஓய்வூதியதாரர்களின்குறைதீர் கூட்டம்

Added : செப் 15, 2022 | |
காஞ்சிபுரம்:ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் அக்., 16ல் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குனர் ஆகியோரால், அக்டோபர் 16ல், காலை 10:30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.ஓய்வூதியம் தொடர்பாக குறைகள்

காஞ்சிபுரம்:ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் அக்., 16ல் நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குனர் ஆகியோரால், அக்டோபர் 16ல், காலை 10:30 மணிக்கு நடத்தப்பட உள்ளது.ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின், அதற்கான முறையீட்டினை மூன்று நகல்களில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு, வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


இக்கூட்டத்தில், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் மூலம் தலா, ஒருவர் வீதம் பங்கேற்கலாம்.வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் முறையீடுகள் மீது மட்டுமே குறைகளைவு அறிக்கை பெற்று, கூட்டம் நடைபெறும் நாளில் விபரம் தெரிவிக்கப் படும். எனவே, தங்களது முறையீடுகளை, குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X