இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: கூரியரில் களள நோட்டு வரவழைத்து புழக்கத்தில் விட்ட வாலிபர் கைது| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': கூரியரில் களள நோட்டு வரவழைத்து புழக்கத்தில் விட்ட வாலிபர் கைது

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (1) | |
இந்திய நிகழ்வுகள் 430 கிலோ தங்கம், வெள்ளிஅமலாக்கத் துறை பறிமுதல்புதுடில்லி-வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, தனியார் 'லாக்கரில்' பதுக்கப்பட்டிருந்த, 47 கோடி ரூபாய் மதிப்புள்ள 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுடில்லியில் அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில்
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்,


இந்திய நிகழ்வுகள்


4


30 கிலோ தங்கம், வெள்ளிஅமலாக்கத் துறை பறிமுதல்புதுடில்லி-வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையின்போது, தனியார் 'லாக்கரில்' பதுக்கப்பட்டிருந்த, 47 கோடி ரூபாய் மதிப்புள்ள 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுடில்லியில் அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து, 2,296 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக, 'பரேக் அலுமினெக்ஸ்' என்ற நிறுவனம் மீது புகார் வந்தது. இது தொடர்பாக, 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை, பல்வேறு போலி நிறுவனங்களின் பெயரில் மாற்றி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பாக, 'ரக் ஷா புல்லியன் மற்றும் கிளாசிக் மார்பெல்ஸ்' நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டது.அப்போது, தனியார் லாக்கருக்கான சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்படி, அந்த தனியார் லாக்கரை நடத்தும் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டது.முறையான அங்கீகாரம் எதுவும் இல்லாமல், போதிய ஆவணங்கள் பராமரிக்கப்படாமல், அங்கு 761 லாக்கர்கள் இருப்பது தெரிய வந்தது.

இதில், மூன்று லாக்கர்கள், ரக் ஷா புல்லியன் நிறுவனத்துக்கு சொந்தமானவை.இந்த லாக்கர்களில் இருந்து, 91.5 கிலோ தங்கக் கட்டிகள், 152 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரக் ஷா புல்லியன் நிறுவனத்தில் இருந்து, 188 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 47 கோடி ரூபாய்.வழக்கு தொடர்பாக, இந்த நிறுவனங்களில், 205 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சாதுக்களை தாக்கியகிராமத்தினர் மீது வழக்குசாங்லி-மஹாராஷ்டிராவில், சாதுக்களை அடித்து நொறுக்கிய கிராமத்தினர் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, ஆறு பேரை கைது செய்தனர்.

இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறியதாவது:உத்தர பிரதேசத்தில் அகாடா என்ற அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் நான்கு பேர், மஹா.,வின் சோலாபூர் மாவட்டத்தில் உள்ள பந்தர்பூருக்கு வாகனத்தில் சென்றனர். அப்போது வழி தவறி லவங்கா என்ற கிராமத்திற்கு வந்த அவர்கள், ஒரு சிறுவனிடம் வழி கேட்டுள்ளனர். அச்சிறுவனுக்கு அவர்கள் பேசியது புரியவில்லை. அதோடு, அவர்களது தோற்றத்தை பார்த்து பயந்த சிறுவன் திருடன் என அலறியுள்ளான்.

இதைக் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர், சாதுக்களை குழந்தை கடத்துபவர்கள் என தவறாக கருதி கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளனர். இது குறித்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாதுக்களை மீட்டு அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்களை தாக்கிய கிராமத்தினர் குறித்து புகார் அளிக்கவில்லை. இருந்தும், போலீசார் ௨௦ பேர் மீது வழக்குப் பதிந்து, ஆறு பேரை நேற்று கைது செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


துணை முதல்வர் மனைவி மீதுஅவதுாறு பரப்பிய பெண் கைதுமும்பை-மஹாராஷ்டிராவின் துணை முதல்வர் மனைவி குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்து பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி வகிக்கிறார். இவரது மனைவி அம்ருதா பட்னவிசின் சமூக வலைதள பக்கத்தில், ஸ்மிருதி பஞ்சால், 50, என்ற பெண் அவதுாறான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.


latest tamil newsஇது குறித்து, மும்பை மாநகர சைபர் கிரைம் போலீசில் அம்ருதா புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் ஸ்மிருதியை நேற்று கைது செய்தனர். 'ஸ்மிருதி, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் 53 போலி கணக்குகளும், 'ஜி -- மெயிலில்' 13 கணக்குகளும் வைத்துள்ளார்' என போலீசார் தெரிவித்தனர்.


தமிழக நிகழ்வுகள்
கூரியரில் கள்ளநோட்டு வரவழைத்து புழக்கத்தில் விட்ட வாலிபர் கைதுசென்னை:ஆந்திரா மாநிலத்திலிருந்து கூரியரில் கள்ள நோட்டுகளை வரவழைத்து, சென்னையில் புழக்கத்தில் விட்டவரை, போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsவேளச்சேரி, காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ், 40. நேற்று முன்தினம் இவரது பெயருக்கு, பள்ளிக்கரணையில் செயல்படும் ஒரு கூரியர் நிறுவனம் வாயிலாக, ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஒரு கூரியர் வந்துள்ளது. இவருக்கு, ஏற்கனவே மூன்று முறை இதே ஆந்திரா முகவரியில் இருந்து கூரியர் வந்ததால் சந்தேகமடைந்த கூரியர் நிறுவனம், அந்த பார்சலை 'ஸ்கேன்' செய்தது. அதில், பணம் இருந்தது.உடனே, சதீசை வரவழைத்த அந்நிறுவனம், அவர் முன்னாலேயே பார்சலை திறக்குமாறு கூறியது.

அவர் திறந்த போது, 100, 200, 500 தாளில், 8,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. பின்னர் சதீசை, வேளச்சேரி போலீசில் ஒப்படைக்க, போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சமூக வலைதளம் வழியாக, ஆந்திராவை சேர்ந்த பெயர், முகவரி தெரியாத நபர் சதீசுக்கு அறிமுகம் ஆகி உள்ளார். மொபைல் போனில் உரையாடி உள்ளனர். ஆந்திரா நபர், 3,000 ரூபாய் கொடுத்தால், 8,000 ரூபாய் கள்ள நோட்டு தருவதாகவும், அதை சில்லறை கடைகளில் மாற்றி லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

குறுக்கு வழியில் பணக்காரனாக நினைத்த சதீஷ், மூன்று முறை 9,000 ரூபாய் அனுப்பி, 24 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பெற்றுள்ளார்.இதை, சென்னை முழுவதும் உள்ள சாலையோர கடைகளில் புழக்கத்தில் விட்டு, லாபம் சம்பாதித்துள்ளார். சென்னையில் இவரைப் போல் வேறு நபர்கள் இருக்கிறார்களா, எங்கெல்லாம் கள்ள நோட்டை மாற்றினார் என விசாரிக்கிறோம்.

சதீஷிடம் தொடர்பு வைத்திருந்த, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் யார், இதற்கு மூளையாக செயல்படுவது யார் என விசாரிக்கிறோம். விரைவில், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை கைது செய்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தந்தை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன் கைதுதஞ்சாவூர்:தாயிடம் தகராறு செய்த தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கூடலிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி 50, அவரது மனைவி எலிசபெத். இவர்களின் மகன் ஆரோக்கிய அருள் வில்டன்ஸ் 27.ராபர்ட் கென்னடி தினமும் குடித்து வந்து தகராறு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு செய்துள்ளார். அப்போது சமாதானம் செய்ய முயன்ற மகனை கீழே தள்ளியுள்ளார். தொடர்ந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன் ஆரோக்கிய அருள் வில்டன்ஸ் அம்மி கல்லை எடுத்து தந்தை தலையில் போட்டுள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே ராபர்ட் கென்னடி இறந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய அருள் வில்டன்சை கைது செய்தனர்.


போலி டாக்டர்கள் இருவர் கைது


சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை அருகே அமராவதிபுதுாரில் போலி டாக்டர்கள் கிளினிக் நடத்துவதாக கலெக்டர் மதுசூதன் ரெட்டிக்கு புகார் வந்தது. மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேவகோட்டை சிதம்பரநாதபுரம் தெருவில் இயங்கிவந்த கிளினிக்கில் நடத்திய ஆய்வில் தாரகராமன் 42, ஒமியோபதி படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இவரை தேவகோட்டை போலீசார் கைது செய்தனர். அமராவதிபுதுாரில் பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்திய முருகானந்தம் 52, என்பவரை சோமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.


ஆடு வியாபாரி கொலை: இருவருக்கு ஆயுள்ராமநாதபுரம்,:ஆடு வியாபாரியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கீழக்கரையை சேர்ந்த சகோதரர்கள் சதாம் உசேன் 21, முகமது தாவூத் 31, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்கு தெருவை சேர்ந்த சகுபர் சாதிக் மகன் லுக்குமான் ஹக்கீம் 32.இவர் ஆடு, கோழி விற்கும் தொழில் செய்தார். இவர் ஆடு, கோழிகளை திருடி விற்பதாக இதே பகுதியை சேர்ந்த அமானுல்லா மகன் முகமது இம்ரான்கான் 29,அடிக்கடி கேலியாக பேசியதால் இருவருக்கும் முன்பகை ஏற்பட்டது.

2019ல் லுக்குமான் ஹக்கீம் ஆடுதிருடு போனது.அந்த ஆடு முகமது இம்ரான்கான் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.தனது தொழிலைகேலி செய்தவர் ஆட்டையும் திருடியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து 2019 ஜன.10ல் கீழக்கரை ஜாமியா நகர் ஆண்கள் பள்ளிவாசல் அருகே லுக்குமான் ஹக்கீம் வந்த போது அவரை முகமது இம்ரான்கான், உறவினரான ஆதம் மகன்கள் சதாம் உசேன் 21, முகமது தாவூத் 31, ஆகியோருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர்.

கீழக்கரை போலீசார் மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கு நடந்த போதே முகமது இம்ரான்கான் இறந்து விட்டார்.இந்த வழக்கில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா தீர்ப்பளித்தார். சகோதரர்கள் சதாம் உசேன், முகமது தாவூத் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.


எலி தலை கிடந்த ஹோட்டலுக்கு 'சீல்'ஆரணி:ஆரணியில், பீட்ரூட் பொரியலில் எலி தலை கிடந்த ஹோட்டலுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனில், 'பாலாஜி பவன்' என்ற சைவ ஹோட்டலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பீட்ரூட் பொரியலில் எலியின் தலை கிடந்தது. இதை கண்டித்து ஹோட்டலை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதையடுத்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி ஹோட்டலுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.பின், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களை அழைத்து, கவனமாகவும், சுத்தமாகவும் உணவுகளை தயாரிக்குமாறு வலியுறுத்தினர்.


பாலியல் தொந்தரவு வாலிபர் கைதுபோடி- -போடி ஜே.கே.பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் மகாவிஷ்ணு 21. இவர் இதே பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி தகாத முறையில் நடந்துள்ளார். வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். போடி டவுன் போலீசார் மகாவிஷ்ணுவை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X