போலீஸ் செய்திகள்

Added : செப் 15, 2022 | |
Advertisement
மாணவர் தற்கொலை திருமங்கலம் : சோழவந்தான் ரோட்டை சேர்ந்த இளங்கோவன் மகன் இதய போஸ் 26, திருச்சி தனியார் கல்லுாரியில் படித்தார். சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் வந்த அவர், கல்லுாரிக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்றவர்கள் கைது
போலீஸ் செய்திகள்


மாணவர் தற்கொலை



திருமங்கலம் : சோழவந்தான் ரோட்டை சேர்ந்த இளங்கோவன் மகன் இதய போஸ் 26, திருச்சி தனியார் கல்லுாரியில் படித்தார். சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் வந்த அவர், கல்லுாரிக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


மது விற்றவர்கள் கைது


திருமங்கலம் : ஆஸ்டின்பட்டி மொட்டமலை மதுக்கடை அருகே தனக்கன்குளம் விஜயராஜன் 47, மது பாட்டில்களை விற்று வந்தார். அவரை கைது செய்து 35 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 2 ஆயிரத்து 950 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.பேரையூர்: ஏ.கிருஷ்ணாபுரம் பரமசிவம் 46. இவர் அதே ஊரில் மது விற்றதாக கைது செய்யப்பட்டார். 46 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 8280 பறிமுதல் செய்தனர்.


டூவீலர் திருடன் கைது





கொட்டாம்பட்டி: வெள்ளமலைப்பட்டி விவசாயி கண்ணதாசன் 27. நேற்று காலை டூ வீலரை பூட்டி விட்டு ஊருக்கு பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பூட்டை உடைத்து டூ வீலர் திருடிய குருவார்பட்டி முத்துக்குமாரை 42, பிடித்து இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் ஒப்படைக்கவே கைது செய்தார்.


கொலை வழக்கில் சிக்கியவர் தற்கொலை


பேரையூர்: தேவன்குறிச்சி தங்கப்பாண்டி 40. இவர் 2020 ல் கோவையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இவ்வழக்கின் தீர்ப்பு செப்.,28ல் வர உள்ளது. வழக்கை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தவர், நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


அரிவாளால் வெட்டியவர் கைது


பாலமேடு: வலையபட்டி முருகன் 44. மும்பையில் பைனான்ஸ் தொழில் செய்கிறார். குடும்ப தகராறால் கடந்த மாதம் மகன், மகளுடன் மனைவி சீலைக்காரி ராஜக்காள்பட்டியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்தார். முருகன், நேற்று இங்கு போதையில் உறவினர் போஸ் உடன் தகராறு செய்துள்ளார். பின் அரிவாளால் மனைவி சீலைக்காரி 34, அவரது தாய் நல்லதங்காளை 60, கழுத்து, கையில் வெட்டினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X