கண்டெடுத்த விஷ்ணு சிலை; வருவாய்த்துறையினர் மீட்பு

Added : செப் 15, 2022 | |
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலையை வருவாய்த்துறையினர் மீட்டு, தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சி, ரேஷன்கடை பின்புறம் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டுமான பணிக்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியபோது 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கால விஷ்ணு சிலை



பண்ருட்டி : பண்ருட்டி அருகே கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலையை வருவாய்த்துறையினர் மீட்டு, தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சி, ரேஷன்கடை பின்புறம் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டுமான பணிக்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியபோது 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கால விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

இச்சிலையை ரேஷன்கடை அருகில் கிராம மக்கள் வைத்து வழிபட்டனர். சிலையை பண்ருட்டி துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.அதற்கு கிராம மக்கள் பெருமாள் கோவில் கட்டி வழிபட விஷ்ணு சிலை தங்களுக்கு வேண்டும் என்றனர். இதனால் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர்.நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் தாசில்தார் கார்த்திகேயன், புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம், துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, வி.ஏ.ஒ., ஆனந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது வருவாய்த்துறை சார்பில், சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, ஊராட்சிக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திகேயன் உறுதியளித்தார்.இதனையடுத்து பிற்பகல் 3:00 மணியளவில் விஷ்ணு சிலையை வருவாய்த்துறையினர் மீட்டு, பண்ருட்டி தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X