விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு; கணக்கில் வராத ரூ. 3.16 லட்சம் பறிமுதல் 

Added : செப் 15, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து ௧௬ ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில்,வட்டார சேவை மைய கட்டடம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் திட்ட வட்டார அலுவலகம், நுாறு நாள் திட்ட அலுவலகம்,இ சேவை மையம் இயங்கி வருகிறது.மகளிர் திட்ட
விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு;  கணக்கில் வராத ரூ. 3.16 லட்சம் பறிமுதல் 



விருத்தாசலம் : விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து ௧௬ ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில்,வட்டார சேவை மைய கட்டடம் அமைந்துள்ளது.

இங்கு மகளிர் திட்ட வட்டார அலுவலகம், நுாறு நாள் திட்ட அலுவலகம்,இ சேவை மையம் இயங்கி வருகிறது.மகளிர் திட்ட அலுவலகத்தில் மகளிர் குழு அமைத்தல், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று தருதல்உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில்,தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ்,இந்த அலுவலகத்தில் பணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக,கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில், நேற்று மாலை 4:00 மணியளவில், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.எஸ்.பி., தேவநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம்,மாவட்ட ஆய்வு குழு வருவாய் ஆய்வாளர் முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மகளிர் திட்ட அலுவலகத்திற்குள் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அலுவலகத்தின் உள்ளே இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மகளிர் திட்ட அலுவலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட கிராம கணக்காளர்கள், நுாறு நாள் திட்ட அலுவலர்கள் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர்.மேலும், மகளிர் திட்ட அலுவலர்,மகளிர் திட்ட மேலாளர் ஆகியோரை, மகளிர் போலீசாரை வரவழைத்து அவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.இதில், கணக்கில் வராத 3 லட்சத்து ௧௬ ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு 11:00 மணிக்கு மேல் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, விசாரணை நடத்தினர்.மகளிர் திட்ட அலுவலகத்தில் நடந்த திடீர் சோதனையால், விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X