கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு கிளப்; விரைவில் துவக்க போலீஸ் கமிஷனர் திட்டம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
கோவை : 'கோவை மாநகரில் 30 இடங்களில், போலீஸ் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் கிளப் தொடங்கப்படும்' என்று கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாலை நேரங்களில் இளைஞர்கள் மத்தியில் படிக்கும் பழக்கம் ஏற்படுத்த, 100 இடங்களில் வீதி நுாலகம் ஏற்படுத்தப்பட உள்ளது. வரும் வாரத்தில் 30 இடங்களில் நுாலகங்கள் திறக்கப்பட்டு விடும்.போலீஸ் சார்பில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப், 11



கோவை : 'கோவை மாநகரில் 30 இடங்களில், போலீஸ் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் கிளப் தொடங்கப்படும்' என்று கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாலை நேரங்களில் இளைஞர்கள் மத்தியில் படிக்கும் பழக்கம் ஏற்படுத்த, 100 இடங்களில் வீதி நுாலகம் ஏற்படுத்தப்பட உள்ளது. வரும் வாரத்தில் 30 இடங்களில் நுாலகங்கள் திறக்கப்பட்டு விடும்.போலீஸ் சார்பில் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப், 11 இடங்களில் உள்ளன. அவற்றை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம்.

இன்னும் 30 இடங்களில் அந்த கிளப் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.போதை விழிப்புணர்வு கிளப், கல்லுாரிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும், அந்தந்த ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடை ரோந்து செல்கிறோம். செல்லும் பகுதிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு பணிதான் முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது.கடந்த ஐந்தாண்டுகளில், எந்தெந்த இடங்களில் விபத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடந்தன என்பது பற்றிய 'டிஜிட்டல் மேப்பிங்' தயார் செய்யப்பட்டுள்ளது. அதிகமாக குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்கள், 'ஹாட் ஸ்பாட்' ஆக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கல்லுாரிகளில் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த கல்லுாரிகளில் போதைப்பொருள் விற்பனை இருக்கிறது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டமும் நடத்தப்பட்டது.கல்லுாரியில் படிக்கும் ஒரு மாணவர் போதைக்கு அடிமையானால், அந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது தொடர்பான, ஒரு தெளிவான பார்வை இல்லாத நிலை உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம், உளவியல் நிபுணர்களை கொண்டு கல்லுாரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு கருத்தரங்கம் நடத்தி, தெளிவான கொள்கைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X