'சைமா' சங்க தேர்தல் ஓட்டுரிமை பெற ஆர்வம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
திருப்பூர், : திருப்பூர் பின்னலாடை துறையின் தாய் சங்கமான 'சைமா'வில், உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தில், ஆறு நிர்வாக பதவி; 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.இச்சங்கத்துக்கு, 2022 --25க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். கடந்த 2ம் தேதி நடந்த செயற்குழுவில், தேர்தல் இல்லாதவகையில், ஏற்கனவே பதவியில் உள்ள நிர்வாகிகளே



திருப்பூர், : திருப்பூர் பின்னலாடை துறையின் தாய் சங்கமான 'சைமா'வில், உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தில், ஆறு நிர்வாக பதவி; 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.இச்சங்கத்துக்கு, 2022 --25க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். கடந்த 2ம் தேதி நடந்த செயற்குழுவில், தேர்தல் இல்லாதவகையில், ஏற்கனவே பதவியில் உள்ள நிர்வாகிகளே அடுத்த மூன்று ஆண்டுகள் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 10ம் தேதி கூடிய அவசர செயற்குழுவில், தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.'சைமா'வில் ஆண்டு சந்தா, 2,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஓட்டுரிமை பெற வேட்பாளர்களும் சந்தா தொகை செலுத்தியிருப்பது கட்டாயமாகிறது. ஆயுள் சந்தா உறுப்பினர் 87 பேருடன் சேர்த்து, மொத்தம் 692 பேர் உறுப்பினராக உள்ளனர்.இவர்களின் 200க்கும் மேற்பட்டோர் சந்தா தொகை செலுத்தாததால், உறுப்பினர் தகுதி, ஓட்டுரிமை இழந்த நிலையில் உள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓட்டுரிமையை மீட்க நிலுவை சந்த தொகை செலுத்துவதில், சங்க உறுப்பினர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X