வடக்கு குறுமைய தடகளம்; மாணவ, மாணவியர் உற்சாகம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
திருப்பூர் |: வடக்கு குறுமைய தடகள போட்டியில் பங்கேற்று, பதக்கங்களை குவிக்க, அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.திருப்பூர் ஆத்துப்பாளையம், ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான குறுமைய தடகள போட்டி நேற்று துவங்கியது. வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் போட்டிகளை துவக்கி வைத்தார். ஏ.வி.பி., பள்ளிகளின் தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா
வடக்கு குறுமைய தடகளம்; மாணவ, மாணவியர் உற்சாகம்



திருப்பூர் |: வடக்கு குறுமைய தடகள போட்டியில் பங்கேற்று, பதக்கங்களை குவிக்க, அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.திருப்பூர் ஆத்துப்பாளையம், ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான குறுமைய தடகள போட்டி நேற்று துவங்கியது. வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் போட்டிகளை துவக்கி வைத்தார். ஏ.வி.பி., பள்ளிகளின் தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா பங்கேற்றனர்.பதிநான்கு, பதினேழு, பத்தொன்பது வயது பிரிவினருக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., ஓட்டங்கள், தொடர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல், தட்டுஎறிதல் ஈட்டிஎறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. 31 பள்ளிகளை சேர்ந்த, 700 மாணவர்கள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர்.


தெற்கு குறுமையம்


திருப்பூர் தெற்கு குறுமைய மாணவியர் தடகள போட்டி பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாணவியருக்கான, 3 ஆயிரம் மீ., ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், மும்முறை தத்தி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X