ஓட்டுச்சாவடி பிரிப்பு; கட்சியினர் வலியுறுத்தல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 2,512 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது, திருப்பூர் வடக்கு தொகுதியில், பெரியார் காலனி ஓட்டுச்சாவடி மட்டும், 1,500 க்கும் அதிகமான வாக்காளர் இருந்ததால், இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி பிரிப்பது தொடர்பான, அனைத்துக்கட்சி கூட்டம், நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது. தேர்தல் பிரிவு



திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 2,512 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது, திருப்பூர் வடக்கு தொகுதியில், பெரியார் காலனி ஓட்டுச்சாவடி மட்டும், 1,500 க்கும் அதிகமான வாக்காளர் இருந்ததால், இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி பிரிப்பது தொடர்பான, அனைத்துக்கட்சி கூட்டம், நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.

தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் வரவேற்றார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று பேசினர்.பா.ஜ., மற்றும் கம்யூ., கட்சி பிரதிநிதிகள் பேசுகையில்,'ஓட்டுச்சாவடியில், 1,500 வாக்காளர் என்பது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும்.எனவே, 1,200 வாக்காளருக்கு ஒரு சாவடி என்ற வகையில் அமைக்க வேண்டும். அப்போதுதான், தேர்தல் நேரத்தில், வாக்காளர் சிரமமின்றி ஓட்டளிக்க வசதியாக இருக்கும்' என, வலியுறுத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X