உயிர் காக்கும் மருந்து: என்.எல்.சி., வழங்கல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
நெய்வேலி : என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சார்பில், தமிழகத்திற்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான 50 ஆயிரம் யூனிட் மருந்துகள் வழங்கப்பட்டது.தமிழகத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இலவசமாக எய்ட்ஸ் நோய்க்கான உயிர் காக்கும் மருந்துகளைப் பெற பதிவு செய்துள்ளனர். எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான உயிர் காக்கும்



நெய்வேலி : என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சார்பில், தமிழகத்திற்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான 50 ஆயிரம் யூனிட் மருந்துகள் வழங்கப்பட்டது.தமிழகத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இலவசமாக எய்ட்ஸ் நோய்க்கான உயிர் காக்கும் மருந்துகளைப் பெற பதிவு செய்துள்ளனர். எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான உயிர் காக்கும் ரெட்ரோ வைரஸ் மருந்துகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடர்கிறது.

தமிழகத்தில் இந்த மருந்துகளை வாங்க சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோர் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமாரை அணுகி, மருந்துகளை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.இந்த கோரிக்கையை ஏற்று, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 50,000 யூனிட் மருந்துகளை உடனடியாக வாங்குவதற்கு சேர்மன் அனுமதி வழங்கிய நிலையில் அந்த மருந்துகள் உடனடியாக வாங்கப்பட்டன.

இதையடுத்து தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு 50 ஆயிரம் யூனிட் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான ரெட்ரோ வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை என்.எல்.சி., மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்வில், மருத்துவமனையின் பொது கண்காணிப்பாளர் தாரிணி மவுலி வழங்கினார்.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில், அதன் தொழில்நுட்ப அலுவலர் சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார். கடலுார் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சத்துணவினை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் ஏற்கெனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X