குட்கா விற்ற கடைக்கு சீல்

Added : செப் 15, 2022 | |
Advertisement
விழுப்புரம் : வளவனுாரில் குட்கா விற்ற கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.வளவனுார் போலீசார், குமாரக்குப்பத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து, கடைக்கு சீல் வைத்தனர்.திண்டிவனம்: திண்டிவனம், அரசு மருத்துவமனை சாலையில் சப் இன்ஸ்பெக்டர்



விழுப்புரம் : வளவனுாரில் குட்கா விற்ற கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.வளவனுார் போலீசார், குமாரக்குப்பத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து, கடைக்கு சீல் வைத்தனர்.திண்டிவனம்: திண்டிவனம், அரசு மருத்துவமனை சாலையில் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளர் கலியமூர்த்தி, 63; என்பவரை கைது செய்து, 1,932 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X