வட்டார வளர்ச்சி துறை பணிகள் காரைக்காலில் அமைச்சர் ஆய்வு

Added : செப் 15, 2022 | |
Advertisement
புதுச்சேரி : காரைக்காலில் வட்டார வளர்ச்சி துறை பணிகள் சம்பந்தமாக, அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆய்வு செய்தார்.குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் நேற்று முன்தினம் காரைக்கால் சென்றார். அங்கு, வட்டார வளர்ச்சி துறை, வட்டார வளர்ச்சி முகமை மூலம் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என
வட்டார வளர்ச்சி துறை பணிகள்  காரைக்காலில் அமைச்சர் ஆய்வு



புதுச்சேரி : காரைக்காலில் வட்டார வளர்ச்சி துறை பணிகள் சம்பந்தமாக, அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆய்வு செய்தார்.குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் நேற்று முன்தினம் காரைக்கால் சென்றார். அங்கு, வட்டார வளர்ச்சி துறை, வட்டார வளர்ச்சி முகமை மூலம் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது பற்றியும், கழிவறை கட்டாத பயனாளிகளுக்கு உடனே இத்திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும். வாய்கால்கள் துார்வாறும் பணி, நுாறுநாள் வேலை திட்ட பணிகளை அதிகாரிகள் சிறப்பாக செய்ய வேண்டும் என அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின், அமைச்சர் சாய்சரவணன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,ஒவ்வொரு மாதம் புதுச்சேரியில் 2ம் தேதி, குடிமை பொருள் வழங்கல் சம்பந்தபட்ட குறைகளை கேட்டறிந்து அந்த மாதமே குறைகளை நிவர்த்தி செய்ய முடிவு செய்துள்ளோம். மாதத்தில் 5ம் தேதி, வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி முகமை மூலம் ஏற்படும் குறைகளை தீர்த்து வைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 11ம் தேதி காரைக்காலில் துறைகளின் குறைபாடுகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கப்படும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X