வருவாய் இருக்கிறது வசதிகள் இல்லை; கோவை சந்திப்பு விரிவாக்கம் அவசியம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டும், கோவை ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.தமிழகத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், சென்னை சென்டரல், எக்மோருக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷனாக கோவை சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் தரும் ஸ்டேஷன்களில், முதலிடத்தில் இருக்கிறது.கோவையை 96 ரயில்கள் கடந்து



சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டும், கோவை ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.தமிழகத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், சென்னை சென்டரல், எக்மோருக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷனாக கோவை சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் தரும் ஸ்டேஷன்களில், முதலிடத்தில் இருக்கிறது.

கோவையை 96 ரயில்கள் கடந்து செல்கின்றன; கடந்த ஆண்டில், கோவை சந்திப்பு ஒரு கோடி ரயில் பயணிகளை கையாண்டிருக்கிறது. இன்னும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி, அதிகமான ரயில்களை இயக்கினால் இந்த வருவாய் பல மடங்கு அதிகரிக்கும்.



தட்டிக்கழிக்கிறது ரயில்வே


ஆனால் ஏற்கனவே இயக்கப்பட்ட பல ரயில்களை மீண்டும் இயக்குவதற்கே, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்காமல், வேண்டுமென்றே தட்டிக்கழித்து வருகிறது. கொங்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும், கட்சி பாகுபாடின்றி, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தினாலும், தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஏற்பதேயில்லை.கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு, இதற்கு அதிகமான ரயில்களைக் கையாளும் திறன் இல்லை என்று காரணமும் கூறி வருகின்றனர்.


டெக்னாலஜி பயன்படுத்தணும்


ஒரு ரயிலின் பிளாட்பார்ம் பயன்பாட்டு நேரம், அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இங்கிருந்து புறப்படும் ரயில்களை, நீண்ட நேரம் நடைமேடையில் நிறுத்த முடியாது.இப்போது கடக்கும் 96 ரயில்களுக்கு, கோவை அருகிலுள்ள மற்ற ஸ்டேஷன்களில் இருக்கும் இடத்தை சிக்னல் தரவும், வேறுவிதங்களில் பயன்படுத்திக் கொள்ளவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.கோவை சந்திப்பில் ஆறு, கோவை வடக்கில் இரண்டு, போத்தனுாரில் ஐந்து என்று மொத்தம் 13 நடைமேடைகள் உள்ளன. இவற்றைத் சரியாகப் பயன்படுத்தினால், கோவைக்கு இன்னும் சிறப்பாக ரயில் இணைப்புகள் கிடைக்கும்.இந்த மூன்று ஸ்டேஷன்களிலும், இன்னும் எட்டு நடைமேடைகளை உருவாக்க முடியுமென்று, கோவையைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள், ரயில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இதே ஆறு நடைமேடைகளுடன், நாட்டிலுள்ள பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களும், கோவையை விட மிக அதிகளவிலான ரயில்களைக் கையாள்வதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.


தேவை கூடுதல் நடைமேடை


இதனால் கோவை சந்திப்பில் ரயில் நெரிசல் அதிகமென்பது, அதிகாரிகள் கூறும் நொண்டிச்சாக்காகவே உள்ளது. எனவே, கோவை சந்திப்பையும், மற்ற ஸ்டேஷன்களையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.குறிப்பாக, கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலாக நான்கு நடைமேடைகளை உருவாக்கி, விரிவாக்கம் செய்வது, நகரின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமாகும்.கோவை சந்திப்பு அருகிலேயே, மத்திய அரசின் ஜவுளித்துறைக்குச் சொந்தமான பல மில்கள் செயல்படாமல் பல ஏக்கர் பரப்பு, காடாக மாறியுள்ளன.அந்த இடத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள கட்டடங்களுக்கு மாற்று இடமாக வழங்கி, தற்போதுள்ள சந்திப்பை விரிவாக்கம் செய்யலாம். இல்லாவிடில், கோவை சந்திப்பையே அங்கு இடம் மாற்றி, 10 அல்லது 12 நடைமேடைகளுடன், சென்னை சென்ட்ரல், மதுரை ஸ்டேஷன்களைப் போல, சிறப்பான கட்டமைப்புடன் பிரமாண்டமான புதிய சந்திப்பை உருவாக்கலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது சாத்தியம்.

2023க்குள் துவங்கினால் நல்லது!

வரும் 2023 பிப்ரவரியில், கோவை ரயில்வே சந்திப்பு 150 ஆண்டுவிழாவைக் கொண்டாடவுள்ளது. அதற்கு முன்பாக, இந்த சந்திப்பை விரிவாக்கும் பணியைத் துவக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியுள்ளது. ரயில் ஆர்வலர்களால் எழுப்பப்படும் இந்த கோரிக்கைக்கு, வலுவான குரல் கொடுக்க அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.



-நமது நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X