பெரியாறு அணை விவகாரம்: முதல்வர் மவுனம் கலைப்பாரா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை-'முல்லை பெரியாறு அணையில் 'ரூல்கர்வ்' முறைப்படி தண்ணீர் தேக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனம் கலைப்பாரா' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார். மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனுகொடுத்தபின், அவர் கூறியதாவது: 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தும் இதுவரை திறக்கவில்லை என்று விவசாயிகள் குமுறுகின்றனர். வைகை அணையில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை-'முல்லை பெரியாறு அணையில் 'ரூல்கர்வ்' முறைப்படி தண்ணீர் தேக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனம் கலைப்பாரா' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.latest tamil news


மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனுகொடுத்தபின், அவர் கூறியதாவது: 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தும் இதுவரை திறக்கவில்லை என்று விவசாயிகள் குமுறுகின்றனர். வைகை அணையில் இருந்து 1116 கனஅடி தண்ணீரை திறந்து விட்டாலே 11 நாட்களில் அப்பகுதி குளங்கள் நிரம்பி விடும்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 3 முறை தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது வைகை அணையில் 70.44 அடி தண்ணீர் உள்ளது. தமிழக அரசோ விவசாயிகள் நலனை கவனத்தில் கொள்ளாத அரசாக உள்ளது. இதற்கு தீர்வு காண கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.இக்கால்வாயில் தண்ணீர் திறந்தால் 35 கண்மாய்கள், 110 கிராமங்கள், ஒரு லட்சம் குடியிருப்புகள், 2500 ஏக்கர் பயன் பெறும். எனவே 11 நாட்கள் தண்ணீர் திறக்க வலியுறுத்துகிறோம். அரசு செவி சாய்க்காவிடில் போராட்டம் நடத்த உள்ளோம்.

'ரூல் கர்வ்' விதிமுறையில் தன்னிச்சையாக கேரளா தண்ணீரை திறக்கிறது. இதை தடுக்க தி.மு.க., அரசு தவறிவிட்டது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனம் கலைத்து, விளக்கம் அளிப்பாரா. அரசு மருத்துவமனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை என்று, ஒற்றை செங்கலை காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்றுவரை ஒரு செங்கல்கூட வைக்கவில்லை.


latest tamil news


அந்த செங்கலை வைத்து முதல்வர் அடிக்கல் நாட்டுவாரா. இன்று அவரது கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், இந்த அரசில் ஊழலற்ற துறையை காட்டினால் ரூ.ஒரு கோடி பரிசு தருவதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
15-செப்-202210:40:25 IST Report Abuse
Kumar அவர் வாய் திறக்க மாட்டார்.வாயில் கேக்கும், பிரியாணியும் இருக்கு. லஞ்சம் வாங்குவது இந்த திருட்டு திராவிடர்கள். ஊழல் செய்வது இந்த திருட்டு திராவிடர்கள்.இவர்களுக்கு பணம் வாங்கி ஓட்டுபோட்டது டாஸ்மாக் தமிழன்.200 ஓவாய் கூவுவது இந்தக் குடிகாரத் தமிழன்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
15-செப்-202206:42:47 IST Report Abuse
Svs Yaadum oore //..முதல்வர் மவுனம் கலைப்பாரா..ஜெகதீசன், இந்த அரசில் ஊழலற்ற துறையை காட்டினால் ரூ.ஒரு கோடி பரிசு..///எல்லா துறையும் லஞ்சம் ஊழல் கொலை கொள்ளை என்று காட்டுமிராண்டிகள் ஆட்சி.. முல்லை பெரியாறு அணை பற்றி இந்த அரசாங்கத்தில் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் கேரளாவுக்கு மலையாளத்தில் ஓணம் வாழ்த்து சொல்வார்கள் ... இது பற்றி மதுரை யோக்கியன் கம்யூனிஸ்ட் எம் பி வாய் திறக்க மாட்டார். இங்குள்ள ஆற்று மணல் அத்தனையும் கேரளாவுக்கு ஏற்றுமதி. அங்கிருந்து மருத்துவ கழிவு தமிழ் நாட்டுக்கு இறக்குமதி ....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-செப்-202205:33:10 IST Report Abuse
NicoleThomson ஊழல் என்றால் அது அந்த குடும்பம் தான் , தண்ணீர் திறப்பது என்றால் என்று வீராணம் படிப்பு போட்டது முதல் இன்று பெரியாறு வரை என்று லிஸ்ட் போடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X