சி.ஐ.டி.யூ., ஆக்கிரமிப்பில் இருந்த இடம் கோர்ட் உத்தரவால் இடித்து அகற்றம்

Added : செப் 15, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் இடத்தை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த படிப்பகம், உணவகம் மற்றும் ஆட்டோ சங்க அலுவலகத்தை கோர்ட் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். புதுச்சேரி காந்தி வீதி மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பில், தனியார் வீட்டின் முன்பகுதியை புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில்
சி.ஐ.டி.யூ., ஆக்கிரமிப்பில் இருந்த இடம் கோர்ட் உத்தரவால் இடித்து அகற்றம்


புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் இடத்தை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த படிப்பகம், உணவகம் மற்றும் ஆட்டோ சங்க அலுவலகத்தை கோர்ட் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். புதுச்சேரி காந்தி வீதி மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பில், தனியார் வீட்டின் முன்பகுதியை புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, பாரதி படிப்பகம் நடத்தப்பட்டு வந்தது. .

மற்றொரு பகுதியை உணவகத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, வீட்டின் உரிமையாளர்கள் சுதாகர், ஆனந்தகிருஷ்ணன், கோதண்டராமன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதுச்சேரி முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி, ஈஸ்வரன் கோவில் வீதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பாரதி படிப்பக கட்டடம், சி.ஐ.டி.யூ., கொடிக்கம்பம் மற்றும் உணவகத்தை அகற்றிட நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து, நகராட்சி கமிஷனர் சிவக்குமார் தலைமையில், வருவாய் அதிகாரி சாம்பசிவம், உதவி பொறியாளர்கள் பழனிராஜா, பிரபாகர், இளநிலை பொறியாளர் சுரேந்திரகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள், நேற்று காலை 10.00 மணியளவில், ஆக்கிரமிப்பு அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அவர்களை ஆட்டோ டிரைவர்கள், சி.ஐ.டி.யூ., மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் தடுத்து நிறுத்தி, வாக்குவாதம் செய்தனர்.

ஜே.சி.பி., இயந்திரம் முன் அமர்ந்தும், சிலர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மீது ஏறி அமர்ந்து, நகராட்சி ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டு ஜே.சி.பி., மூலம் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினர்.இந்த சம்பவத்தினால் ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும் காந்தி வீதிகளில் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X