மேற்கு குறுமைய தடகளத்தில் மாணவர்கள் அசத்தல்.

Added : செப் 15, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடக்கும் மேற்கு குறுமைய தடகள போட்டிகளில், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.பொள்ளாச்சி மேற்கு குறுமைய தடகள போட்டிகளை, பி.கே.டி., மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைத்து நடத்தியது. மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் போட்டிகள் நடக்கின்றன.அதில், ஆண்களுக்கான, 17 வயதுக்கு உட்பட்ட, 3,000 மீட்டர் ஓட்டத்தில், புரவிபாளையம் அரசு
மேற்கு குறுமைய தடகளத்தில் மாணவர்கள் அசத்தல்.



பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடக்கும் மேற்கு குறுமைய தடகள போட்டிகளில், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.பொள்ளாச்சி மேற்கு குறுமைய தடகள போட்டிகளை, பி.கே.டி., மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைத்து நடத்தியது. மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் போட்டிகள் நடக்கின்றன.அதில், ஆண்களுக்கான, 17 வயதுக்கு உட்பட்ட, 3,000 மீட்டர் ஓட்டத்தில், புரவிபாளையம் அரசு பள்ளி மாணவர் சிவமதன் முதலிடம் பெற்றார்.

ருக்மணியம்மாள் பள்ளி மாணவர் சிவக்குமார் இரண்டாமிடம், ராமபட்டணம் பள்ளி மாணவர் பாலவிக்னேஷ் மூன்றாமிடம் பெற்றனர்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 3,000 மீட்டர் ஓட்டத்தில், பி.கே.டி., பள்ளி மாணவர் சர்வேஷ் முதலிடம்; புரவிபாளையம் பள்ளி மாணவர் மகேந்திரன் இரண்டாமிடம், கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவர் சாமுவேல் மூன்றாமிடமும் பிடித்தனர்.14 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதலில், ருக்மணியம்மாள் பள்ளி மாணவர் சிவரஞ்சன் முதலிடம்; புரவிபாளையம் மாணவர் மாரிமுத்து இரண்டாமிடம், செண்பகம் பள்ளி மாணவர் ஞானேஷ் மூன்றாமிடமும் பெற்றனர்.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான உயரம் தாண்டுதலில், செண்பகம் பள்ளி மாணவர் நிகில் கிருஷ்ணா முதலிடம்; புரவிபாளையம் பள்ளி மாணவர் மாரிமுத்து இரண்டாமிடம்; ருக்மணியம்மாள் பள்ளி மாணவர் ராயன் மூன்றாமிடமும் பிடித்தனர்.அதே பிரிவுக்கான நீளம் தாண்டுதலில், ருக்மணியம்மாள் பள்ளி மாணவர் சிவரஞ்சன் முதலிடம்; புரவிபாளையம் மாணவர் மாரிமுத்து இரண்டாமிடம்; கிணத்துக்கடவு பள்ளி மாணவர் அஜய் மூன்றாமிடம் பெற்றனர்.தட்டு எறிதலில், புரவிபாளையம் மாணவர் மாரிமுத்து, தமிழ்செல்வன் ஆகியோர் முதல், இரண்டாம் இடமும்; விவேக் வித்யாலயா பள்ளி மாணவர் ரஞ்சித்குமார் மூன்றாமிடமும் வென்றனர்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 400 மீட்டர் தடை தாண்டுதலில் புரவிபாளையம் பள்ளி மாணவர் பூபாலன், அதிசயராஜ் ஆகியோர் முதல், இரண்டாம் இடம்; ராமபட்டணம் பள்ளி மாணவர் மகேந்திரன் மூன்றாமிடம் பெற்றனர்.

அதே பிரிவுக்கான நீளம் தாண்டுதலில், எம்.எம்.எஸ்., பள்ளி மாணவர் சுபாஷ் முதலிடம்; கிட்ஸ் பார்க் பள்ளி மாணவர் ரகுராம் இரண்டாமிடம்; பி.கேடி., பள்ளி மாணவன் அம்ஜத் மூன்றாமிடம் வென்றனர்.மும்முறை தாண்டுதல் போட்டியில், புரவிபாளையம் பள்ளி மாணவர் கவின் முதலிடம்; பி.கே.டி., பள்ளி மாணவர் வினுமித்ரன் இரண்டாமிடம்; புரவிபாளையம் பள்ளி மாணவர் குருபிரசாத் மூன்றாமிடம் பிடித்தனர்.

குண்டு எறிதலில், சமத்துார் பள்ளி மாணவர் ஜெயசூரியா முதலிடம்; கேசவ் வித்யா மந்திர் மாணவர் ஆனந்த கிருஷ்ணன் இரண்டாமிடம்; பி.கே.டி., பள்ளி மாணவர் கவிபாரதி மூன்றாமிடம் பெற்றனர்.தட்டு எறிதல் போட்டியில், சமத்துார் பள்ளி மாணவர் ஜெயசூரியா முதலிடம்; கேசவ் வித்யா மந்திர் மாணவர் தருண் இரண்டாமிடம்; கிணத்துக்கடவு பள்ளி மாணவர் ராகுல் மூன்றாமிடம் வென்றனர்.ஈட்டி எறிதலில், புரவிபாளையம் பள்ளி மாணவர் பூபாலன் முதலிடம்; கேசவ் வித்யா மந்திர் மாணவர் நல்ல மாதவன், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர், 2ம், 3ம் இடம் பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X