ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது?

Updated : செப் 15, 2022 | Added : செப் 15, 2022 | கருத்துகள் (160) | |
Advertisement
ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்களை, தி.மு.க., அரசு கண்டுகொள்ளாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் கோவில் கோவிலாக சென்று வழிபடுவது, ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரம் என்று விமர்சனங்கள் எழுந்து உள்ளன. கடவுள் நம்பிக்கை குறித்த கேள்வி எழும் போதெல்லாம், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெல்லாம் சொல்லி, தி.மு.க.,வினர் சமாளித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்களை, தி.மு.க., அரசு கண்டுகொள்ளாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் கோவில் கோவிலாக சென்று வழிபடுவது, ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரம் என்று விமர்சனங்கள் எழுந்து உள்ளன.latest tamil newsகடவுள் நம்பிக்கை குறித்த கேள்வி எழும் போதெல்லாம், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெல்லாம் சொல்லி, தி.மு.க.,வினர் சமாளித்து விடுவர். ஆனாலும், தி.மு.க.,வினரின் ஆழ்மனதில் உள்ள ஹிந்து மத எதிர்ப்பு என்பது, அவ்வப்போது வெளிவந்து விடும்.


கேலி, கிண்டல்தி.மு.க., துணைப் பொதுச் செயலர்கள் பொன்முடி, ஆ.ராஜா, தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலர் டி.ஆர்.பி.ராஜா போன்ற தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் பலரும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பகுத்தறிவு, சுயமரியாதை என்ற பெயரில், ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் கேலியும், கிண்டலும் செய்வது வழக்கம்.மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்துச் சொல்லும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர், தீபாவளி உள்ளிட்ட ஹிந்து மத பண்டிகைகள் எதற்கும் வாழ்த்து சொல்லவில்லை.


விமர்சனம்


இது குறித்து, சட்டசபையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, 'தி.மு.க., தலைவராக ஸ்டாலினிடம் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால், முதல்வராக அவர் வாழ்த்து சொல்லாதது வருத்தம் அளிக்கிறது' என, கேள்வி எழுப்பினார்.'ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது அப்பட்டமான ஹிந்து மத வெறுப்பின் வெளிப்பாடு' என, ஹிந்து அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. ஆனாலும், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதை, தவிர்த்தே வருகின்றனர்.கடந்த 2016 சட்டசபை தேர்தலின்போது, 'தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. தி.மு.க.,வில் இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் ஹிந்துக்கள்' என்றார் ஸ்டாலின்.

ஆனால், தி.மு.க., ஆட்சியில் சிதம்பரம் ஸ்ரீநடராஜரை இழிவுபடுத்தி பேசியவர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், மாற்று மதங்களை விமர்சிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர்.தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா, 'ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்.'ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்' என, சமீபத்தில் கடுமையாக பேசியிருக்கிறார்; அவர் மீதும் நடவடிக்கை இல்லை.தி.மு.க.,வினரின் இதுபோன்ற செயல்பாடுகளால், ஹிந்துக்களின் ஆதரவை இழந்து வருவதை, அக்கட்சி உணர்ந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின், 2021 சட்டசபை தேர்தலில் வென்று, தி.மு.க., ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்ததால், 15 சதவீத சிறுபான்மையினர் தங்களுக்கு ஓட்டளித்ததாக, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். யாகம்ஆனால், தி.மு.க., கூட்டணிக்கு 45.38 சதவீதம், அ.தி.மு.க., கூட்டணிக்கு 38.71 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. 15 சதவீதம் சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைத்தும், அ.தி.மு.க., அணியை விட, ௬.67 சதவீதம் மட்டுமே, தி.மு.க., கூட்டணி அதிகம் பெற்றுள்ளது. தினகரன் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால், தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற சில கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்திருந்தால், தி.மு.க.,வின் நிலை படுமோசமாக இருந்திருக்கும்.

இதை உணர்ந்தே,ஹிந்துக்களின் ஆதரவை தக்க வைக்கவும், பா.ஜ.,வின் விமர்சனங்களை எதிர்கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினர், கோவில் கோவிலாக சென்று வழிபடுகின்றனர்; யாகம் நடத்துகின்றனர். மறுபக்கம்இது, ஹிந்துக்களை ஏமாற்றும் தி.மு.க.,வின் தந்திரம் என, பா.ஜ., ஆதர வாளர்கள், சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.


latest tamil newsசிறுபான்மையினர் ஓட்டுகளையும் சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டும் என்பது ஒரு பக்கம்.அதே நேரத்தில், ஹிந்துக்களின் ஆதரவையும் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, குடும்பத்தினரை கோவில்களுக்கு அனுப்பி, அதன் படங்களை ஊடகங்களில் வெளியிட வைப்பது மறுபக்கம் என, தி.மு.க., தந்திரமாக செயல்படுவதாக, பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
20-செப்-202202:54:47 IST Report Abuse
Venkatakrishnan "ஹிந்து என்பது மதம் கிடையாது" அது இந்தியாவின் வாழ்க்கைமுறையே என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தபின் இந்த விவாதம்...?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-செப்-202219:55:45 IST Report Abuse
Krishnamurthy Venkatesan துர்கா ஸ்டாலின் அவர்கள் கடவுள் பக்தை என எல்லோரும் அறிந்தது. அவர் ஏன் ராசா போன்றவர்கள் ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் அவமரியாதை செய்து பேசும்போது துணிந்து எதிர் அறிக்கை விட கூடாது. ஒருவேளை இங்கு பெண் சுதந்திரம் இல்லையோ என்னவோ?
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
17-செப்-202211:18:07 IST Report Abuse
krish ஆத்திகம் -நாத்திகம் கலந்ததுதான் தமிழகம். பதி, இறை பக்தி கொண்ட துர்கா அம்மையார் கோயில் வழிபாடு. களங்கம் கற்பிப்பது தவறு. பூவோடு சேர்ந்த நாறும் மனக்கட்டுமே.
Rate this:
Venkatakrishnan - Mumbai,இந்தியா
20-செப்-202202:56:08 IST Report Abuse
Venkatakrishnanஇந்த அளவுக்கு ஆழமான பார்வையெல்லாம் இல்லை பாருங்கோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X