தஞ்சை தமிழ் பல்கலையில் அட்சய பாத்திரம் திட்டம் | Dinamalar

தஞ்சை தமிழ் பல்கலையில் அட்சய பாத்திரம் திட்டம்

Added : செப் 15, 2022 | |
தஞ்சாவூர் : தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை குறைக்கும் வகையில், அட்சய பாத்திரம் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, வள்ளலார் சன்மார்க்க மன்றத்தின் சார்பில், குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் வகையில், அட்சயப் பாத்திர திட்டம் துவக்க விழா நேற்று



தஞ்சாவூர் : தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், விடுதி மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை குறைக்கும் வகையில், அட்சய பாத்திரம் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.



தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, வள்ளலார் சன்மார்க்க மன்றத்தின் சார்பில், குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் வகையில், அட்சயப் பாத்திர திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை பொறுப்பாளர் மஞ்சுளா, திட்டம் குறித்து விளக்கினார். திருவெண்காடு வள்ளலார் தமிழ் மன்றத்தின் தலைவரும், இ.எஸ்.ஐ., இயக்குநருமான ஜெயராஜமூர்த்தி துவக்கி வைத்தார்.


அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம், பல அமைப்புகளின் உதவியுடன் விடுதியில் உள்ள 450 மாணவர்களுக்கு இந்த திட்டம் நேற்று அறிமுகமானது.இப்போது, மாதம், 2,000 ரூபாய் உணவு கட்டணம் செலுத்தி வரும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கட்டணம் குறையும், என பல்கலைகழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X