சமயபுரம் கோவிலில் தடுப்புகளைதகர்த்த 28 பேர் தலைமறைவு

Added : செப் 15, 2022 | |
Advertisement
திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தடுப்புகளை உடைத்து, முறைகேடாக பக்தர்களை அழைத்துச் சென்ற 28 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மாரியம்மனை தரிசித்தும், அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், விரைவு தரிசனத்துக்கு அழைத்துச்



திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தடுப்புகளை உடைத்து, முறைகேடாக பக்தர்களை அழைத்துச் சென்ற 28 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மாரியம்மனை தரிசித்தும், அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், விரைவு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி, சிலர் பணம் வசூல் செய்தனர். மேலும், கோவிலின் பின்னால், தடுப்பை சேதப்படுத்தி, அதன் வழியாக, பணம் கொடுத்த பக்தர்களை, சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பல மாதங்களாக இந்த சம்பவம் நடந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன், கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன உதவி காவல் அதிகாரி ஆறுமுகம், முறைகேடாக பக்தர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதை தடுத்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த திருச்சி, சிந்தாமணியை சேர்ந்த சந்தோஷ், நரசிம்மங்கபுரத்தை சேர்ந்த தணிகைவேல் ஆகியோர் ஆறுமுகத்தை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம், மண்ணச்சநல்லுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகார்படி, சமயபுரம் போலீசார் தணிகைவேல், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.இந்நிலையில், கோவில் உதவி ஆணையர் கல்யாணி, கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், கோவிலில் மேற்கு மற்றும் தெற்கு நுழைவு பகுதியில் உள்ள தடுப்புகளை உடைத்து, முறைகேடாக பக்தர்களை அழைத்துச் சென்ற 28 பேரை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்குமாறு, நேற்று முன்தினம், சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, 28 பேரை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X